dinamalar telegram
Advertisement

ரவுத்திர வீணை!

Share

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு,

கல்குவாரி முதலாளிகள் கூலித் தொழிலாளர்களோட பாதுகாப்பை பற்றி கவலைப்படுறது இல்லை; இதை ஆய்வு பண்ணி நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் கடமையை செய்றதில்லை. இந்த துரோகம்தான் நான் இப்படி கண்ணீர் வடிக்க காரணம்!

கல்குவாரி கூலியா வேலை பார்த்துட்டிருந்த என் கணவர், 2020 பிப்ரவரி 20ம் தேதி செ.புதுார் கிராம மலை குவாரி விபத்துல பாறை சரிஞ்சு இறந்துட்டார். பெரியதச்சூர் காவல் நிலையத்துல வழக்கு பதிவாச்சு. 'உரிய நிவாரணம் கிடைக்குற வரைக்கும் சடலத்தை வாங்க மாட்டோம்'னு போராட்டம் பண்ணினதும் அரசு அதிகாரிகள் சமரசம் பேசினாங்க!

ஒப்பந்ததாரர் மூணு லட்ச ரூபாய் இழப்பீடு தந்தார்; மீதம் ஒரு லட்சம் தர்றதாகவும் சொன்னார்; இன்னும் அது கிடைக்கலை! 'முதல்வர் நிவாரண நிதி'யும் கைக்கு வரலை! 'நல வாரிய உறுப்பினர்' பதிவு இல்லாததால அந்த நிவாரணத்துக்கு வாய்ப்பில்லை. எங்க வி.ஏ.ஓ., விக்கிரவாண்டி தாசில்தார், விழுப்புரம் ஆட்சியர்கிட்டே மனு கொடுத்து பார்த்துட்டேன். பிரயோஜனமில்லை!

இப்போ, என் சின்ன பொண்ணு தன் படிப்பை நிறுத்திட்டு வேலைக்குப் போக வேண்டிய சூழல்; நீங்க செய்றது நியாயமாய்யா?

- கல்குவாரியில் பலியான கணவர் ராமகிருஷ்ணனுக்கான இழப்பீடு கேட்டுப் போராடும் விஜயா, முட்டத்துார், விழுப்புரம்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Dr SS - Chennai,இந்தியா

    பிரதம மந்திரியின் அலுவலகத்திற்கு ஊடனே விண்ணப்பிக்கவும். நிவாரணம் நிச்சயம்.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement