dinamalar telegram
Advertisement

ஒரு தமிழச்சி சிந்திக்கிறாள்!

Share

* சமீபத்தில் 'நல்லாசிரியர்' விருது பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 342 பேர்; தனியார் பள்ளி ஆசிரியர்கள் வெறும் 37 பேர்! அரசுப் பள்ளி சூழல் இப்படி சிறப்பா இருக்குறப்போ, 'தனியார் பள்ளிமாணவர்களுடன் போட்டியிட்டு தொழிற்கல்வி படிப்புகளில் இடம்பிடிப்பதில் அரசுப் பள்ளி மாணவர்கள் பின்தங்கியுள்ளனர்'னு முதல்வர் ஏன் சொல்லணும்!

* 'கணவனை இழந்த பெண்களுக்கு 5 செம்மறி ஆடுகள் அல்லது வெள்ளாடுகள் இலவசமாக வழங்கப்படும்'னு சட்டசபையில அறிவிக்கிற கால்நடைத் துறை அமைச்சர், 'அந்த பெண்கள்ல எத்தனை பேர் விதவையாகுறதுக்கு தமிழக அரசு நடத்துற டாஸ்மாக் காரணம்'னும் சேர்த்து சொல்லியிருந்தா அரசுக்கு பெரிய கவுரவமா இருந்திருக்கும்!

* 'சென்னை கீழ்ப்பாக்கம் கூழ் ஊற்றும் விழாவினால் 'கொரோனா' பெற்று உயிரிழந்தவர் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை' - சுகாதாரத்துறை செயலர். சார்... 'கொரோனா தொற்றால் உயிரிழக்கும் அரசு அலுவலர்கள், அதிகாரிகள் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களா'ன்னும் சொல்லுங்க சார்; மக்களுக்கு விழிப்புணர்வு வரட்டும்!

* தன்னை புகழ்ந்து பேசக் கூடாதுன்னு இத்தனை முறை சட்டசபையில சொல்ற முதல்வர், கூட்டத்தொடருக்கு முன்னாடி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்துல இந்த அறிவுரையை சொல்லாமலா இருந்திருப்பார்; ஆக... 'புகழ்மொழி விரும்பா முதல்வர்' அடையாளத்தை சட்டசபை வரலாற்றில் பதிவு பண்ணியாச்சு!

ஆஹா... பிரமாதம்!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement