dinamalar telegram
Advertisement

பெயர் ஒன்றே போதும் எதையும் விற்பனை செய்யலாம்

Share

பல்வேறு நிறுவனங்களின் தயாரிப்புகளை விற்கும் தளமாக இயங்கி வரும் மின்னணு வர்த்தக நிறுவனங்கள், ஒருகட்டத்தில் தாங்களே பொருட்களை தயாரிக்கும் முயற்சியில் இறங்கி விடுகின்றன.
'அமேசான்' மின்னணு வர்த்தக நிறுவனம், ஸ்பீக்கர் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. தற்போது, பெரிய அளவிலான 'டிவி' தயாரிப்பிலும் இறங்கி உள்ளது.
அமேசான் நிறுவனம், 'அலெக்ஸா' குரல் வழி சேவையுடன் கூடிய 55 - 75 அங்குலம் வரையிலான பெரிய 'டிவி'களை தயாரித்து, அக்டோபர் மாத வாக்கில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த 'டிவி' தயாரிப்புக்காக இந்நிறுவனம், டி.சி.எல்., போன்ற வெளிநிறுவனத்துடன் கூட்டு வைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பெரிய அளவிலான டிவி, முதற்கட்டமாக அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை, ஏற்கனவே, 'அமேசன் பேசிக்ஸ்' எனும் 'பிராண்டு' பெயரில் டிவிகளை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இத்தகைய டிவிகள், 'அமேசான் பயர் டிவி' மென்பொருள் சேவையும் கொண்டவையாகும். தன்னுடைய சொந்த பிராண்டு பெயரில், பெரிய அளவிலான 'டிவி'களை அறிமுகம் செய்வது குறித்து அமேசான் இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.
மொத்தத்தில், 'பெயர்' மட்டும் இருந்தால் போதுமானது; எதையும் விற்பனை செய்துவிடலாம் போலிருக்கிறது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement