dinamalar telegram
Advertisement

'மின்னலா' மஹிந்திரா

Share

புதிய மஹிந்திரா பொலிரோ நியோ 7 சீட்டர்(2+3+2) எம்யுவி., விற்பனைக்கு களமிறக்கப்பட்டு உள்ளது.
என்4, என்8, என் 10, என் 10(ஒ) என நான்கு வேரியன்ட்களில் கிடைக்கும். இதில் என்10 (ஒ) வேரியன்ட் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மஹிந்திரா டியூவி 300 அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. கலக்கலான முகப்பு பகுதி, 6- ஸ்லாட் குரோம் கிரில், ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல், வட்ட வடிவ பனி விளக்கு, 5 ஸ்போக் அலாய் வீல், புளூடூத் இணைப்பு வசதி உடன் 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், டூயல் டோன் ஸ்டியரிங் வீல், டூயல் ஏர்பேக்குகள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம், 2 -டின் மியுசிக் சிஸ்டம், 4 ஸ்பீக்கர்கள், குரூஸ் கன்ட்ரோல் சிறப்பம்சம். இதன் பிஎஸ்-6 தரத்திலான 1.5 லிட்டர் எம்ஹாக் டீசல் இன்ஜின், 100 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

விலை: ரூ. 8.48 - 9.99 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement