dinamalar telegram
Advertisement

கிண்டிலில் வண்ணத்திரை

Share

கிண்டில் உள்ளிட்ட, மின்னணு புத்தகங்களை வாசிக்கும் சாதனங்களின் திரையில், கறுப்பு - --- வெள்ளை வண்ணம் மட்டுமே இடம்பெற்று வருகிறது.இந்நிலையில், தற்போது பல வண்ணங்கள் இடம்பெறும் வகையிலான திரையை தயாரித்து இருக்கிறார்கள்.ஸ்வீடனில் உள்ள பல்கலைக் கழகம் ஒன்றில், காகிதம் அளவிலான தடிமனில், ஸ்கிரீன் ஒன்றை தயாரித்து உள்ளனர். இது, கலர் டிஸ்பிளே என்பதால், கிண்டில் போன்றவற்றில் இனி வண்ணங்களை காணலாம்.கிண்டில் உள்ளிட்ட மின்னணு புத்தக சாதனங்களில், அறைகளில் படிக்கும்போது வசதியாக இருப்பினும், சூரிய ஒளியில் கண்ணுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக அவை இருக்கின்றன. தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் காகித அளவிலான டிஸ்பிளேவில், இந்த சிரமங்கள் இருக்காது. மேலும், குறைந்த அளவிலான மின்சாரமே இதற்கு தேவைப்படும்.இனி, வண்ணமயமான ஓவிய புத்தகங்களை கூட கிண்டிலில் படிக்க, பார்க்க முடியும் என்பது நற்செய்தி தான்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement