dinamalar telegram
Advertisement

கருப்பு தான் புடிச்ச கலரு 'அல்ட்ராஸ்'

Share

டாடா அல்ட்ராஸ் கார் புதிதாக கருப்பு வண்ணத்தில் களமிறக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்இசட் பிளஸ் வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கும். 16 இன்ச் அலாய் வீல் பகுதி, மிரர், இருக்கைகள், கேபின், டேஷ்போர்டு, ஸ்டியரிங் வீல், பட்டன்கள் என எல்லாமே கருப்பு வண்ணத்தில் ஜொலிக்கின்றன. 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல்(85 பிஎச்பி பவர், 113 என்எம் டார்க் திறன்), 1.2 லிட்டர் ஐ--டர்போ பெட்ரோல்(107 பிஎச்பி பவர், 140 என்எம் டார்க் திறன்) என இரண்டு இன்ஜின் ஆப்ஷனில் கிடைக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

எல்இடி பகல்நேர விளக்குகள், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், 7 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், டூயல் ஏர்பேக்குகள், 8 ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம், ஆம்பியன்ட் லைட்டிங், ரியர் வியூ கேமரா, 'ஐரா' கனெக்டெட் தொழில்நுட்பம், இபிடி உடன் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் சிறப்பம்சம்.

விலை: ரூ.8.71--9.36 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)
சென்னை டீலர்: Tafe ACCESS Tata - 74016 99805
கோவை டீலர்: SRT Tata - 9944899448

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement