dinamalar telegram
Advertisement

நினைத்தேன்... நெக்ஸான்

Share

இளம் வாடிக்கையாளர்களை கவர டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் காரில் புதிதாக டார்க் எடிஷன் மாடல் விரைவில் அறிமுக மாக உள்ளது. 'ஸ்போர்ட்டி அட்லஸ் பிளாக்'எனும் கருப்பு வண்ணத்தில் களமிறக்க உள்ளனர். அலாய் வீல்கள், டெயில் லைட் கிளஸ்டர்கள், டேஷ்போர்டு, இருக்கைகள், டோர் பேனல்கள் என அனைத்தும் கருப்பு வண்ணத்தில் ஜொலிக்கும்.

இதன் 30.2 கிலோவாட் லித்தியம் அயான் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால், 312 கி.மீ., துாரம் பயணிக்கலாம். டிசி பாஸ்ட் சார்ஜர் மூலம் ஒரு மணிநேரத்தில் 80 சத வீதம் சார்ஜ் ஏற்றலாம். சாதாரண ஏசி சார்ஜர் என்றால் 8-9 மணிநேரம் தேவைப்படும். எல்இடி பகல் நேர விளக்குகள், நவீன 'சிப்ட்ரான்' தொழில்நுட்பம், இபிடி உடன் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், புஷ்-பட்டன் ஸ்டார்ட், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 'ஏசி' சிஸ்டம். 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், 7.0 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 8 ஸ்பீக்கர் ஹார்மன் சவுண்ட் சிஸ்டம், ரிவர்ஸ் அசிஸ்ட், எலக்ட்ரிக் சன்ரூப் சிறப்பம்சம்.
விலை ரூ.20,000 அதிகரிக்கப் படலாம். தற்போது நீலநிறத்தில் கிடைக்கிறது.

எதிர்பார்க்கும் விலை: ரூ.14.20-16.76 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement