dinamalar telegram
Advertisement

மலைத்தேன்... கைகர்

Share

ரெனால்ட் கைகர் சப்-காம்பேக்ட் எஸ்யூவி., விலையேற்றம் வாடிக்கை யாளர்களை மலைக்க வைத்துள்ளது. ஆர்எக்ஸ்இ, ஆர்எக்ஸ்எல், ஆர்எக்ஸ்டி, ஆர்எக்ஸ்இசட் என நான்கு வேரியன்ட்டுகளில் கிடைக்கும். ஆரம்ப ரக வேரியன்ட் விலை ரூ. 9000-19,000, உயரிய வேரியன்ட்டான ஆர்எக்ஸ்இசட் (சிவிடி, டிடி) விலை ரூ.39,000 அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், 100 பிஎச்பி பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மற்றொரு மாடலான 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின், 72 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் அளிக்கும். 5 ஸ்பீடு மேனுவல், ஏஎம்டி, சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

எல்இடி ஹெட்லைட்டுகள், 210 மி.மீ., கிரவுண்ட் கிளியரன்ஸ், 8 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் இன்போ டெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை இயக்கும் வசதி, புளூடூத் கனெக்ட்டிவிட்டி, பிஎம் 2.5 ஏர் பில்டர், ரேடார் சென்சார் உடன் ரிவர்ஸ் கேமரா, அர்கமிஸ் 3டி சவுண்ட் சிஸ்டம், 7 இன்ச் டிஎப்டி ஸ்கிரீன் உடன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், டைமண்ட் கட் அலாய் வீல்கள், ஆட்டோமேட்டிக் கிளை மேட் கன்ட்ரோல், ஆம்பியன்ட் லைட்டிங், இபிடி உடன் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், மூன்று டிரைவிங் மோடுகள்(நார்மல், ஈக்கோ, ஸ்போர்ட்ஸ்) சிறப்பம்சம்.

புதிய விலை: ரூ.5.64-10.08 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement