Load Image
dinamalar telegram
Advertisement

அற்புதமாய் டிரைபர்

பாதுகாப்பு சோதனையில் ரெனால்ட் டிரைபர் மினி எம்பிவி கார் நான்கு நட்சத்திர மதிப்பீட்டை பெற்று அசத்தியது. மோதல் சோதனையை(கிராஷ் -டெஸ்ட்) குளோபல் என்சிஏபி அமைப்பு ஜெர்மனியில் நடத்தியது. மணிக்கு 64 கி.மீ., வேகத்தில் கார் இயக்கப்பட்டது. இதில் டிரைபர் காரின் உட்புறத்தில் மனிதருக்கு மாற்றாக வைக்கப்பட்ட டம்மி பொம்மைகளுக்கு பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. ஓட்டுபவரின் தலை, கழுத்து, கால்களுக்கு அதிக பாதுகாப்பு வழங்கியது.

பெரியவர்களுக்கான பாது காப்பில் நான்கு, சிறுவர்களுக்கான பாதுகாப்பில் 3 நட்சத்திர மதிப்பீட்டை எட்டிய முதல் 7 சீட்டர் கார் என்ற பெருமையை பெற்றது. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், சீட் பெல்ட் ரிமைண்டர், ஹை ஸ்பீடு அலர்ட், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ரியர் பார்க்கிங் கேமரா, இரட்டை ஏர் பேக்குகள் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. தவிர, பட்ஜெட் விலை, எல்இடி பகல்நேர விளக்குகள், 8.0 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் சிறப்பம்சம். இதன் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 71 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல்/ ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும்.

விலை: ரூ. 5.50-7.95 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement