dinamalar telegram
Advertisement

ஆனந்தமாய் கமாண்டர்

Share

புதிய ஜீப் கமாண்டர் 7 சீட்டர் எஸ்யூவி., மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதற்கான 'டீசர்' வெளியிடப்பட்டுள்ளது. மூன்று வரிசை இருக்கை, விசாலமான இடவசதி, கம்பீரமான தோற்றம் என மிரட்டுகிறது. 1990களில் மஹிந்திரா எம்யுவி., வாகனம் கமாண்டர் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் ஜீப் பேட்ரியாட் என பெயர் மாற்றப்படலாம்.
இதன் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் மல்டிஜெட் டர்போ டீசல் இன்ஜின், 200 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் அளிக்கும். 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

புதிய கிரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட் கிளஸ்டர், பனோரமிக் சன்ரூப், 4 ஜி கனெக்டிவிட்டி, அடாப்டிப் குரூஸ் கன்ட்ரோல், ரூப் ரெயில்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூ மென்ட் கிளஸ்டர் சிறப்பம்சம். விரை வில் பிரேசிலில் அறிமுகம் செய்ய உள்ளனர். இந்தியாவில் கொரோனா அலை ஓய்ந்த பின் 2022, ஏப்ரலில் களமிறக்க திட்டமிட்டு உள்ளனர்.

எதிர்பார்க்கும் விலை: ரூ. 22-38 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement