Load Image
dinamalar telegram
Advertisement

அருமையாய் மெர்சிடிஸ்

புதிய மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ் 600 அல்ட்ரா சொகுசு எஸ்யூவி., ஜூன் 8 ல் விற்பனைக்கு வருகிறது. 4, 5 சீட்டர் ஆப்ஷனில் கிடைக்கும். சொகுசு பயணத்துக்கு ஏற்ற ஏராளமான அம்சங்கள் உள்ளன. 0-100 கி.மீ., வேகத்தை 4.9 வினாடிகளில் எட்டும். மணிக்கு 250 கி.மீ., வேகத்தில் பறக்கும்.

கிரில், பம்பருக்கு குரோம் பூச்சு, 22/23 இன்ச் மல்டி ஸ்போக் சக்கரங்கள், புஷ் பேக், மசாஜ் வசதியுடன் இருக்கை, பனோரமிக் சன்ரூப், போல்டிங் டேபிள், பிரிட்ஜ் வசதி, 12.3 இன்ச் எம்பியூஎக்ஸ் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பர்ம்ஸ்டெர் ஸ்டீரியோ சவுண்ட் சிஸ்டம், எல்இடி ஆப்டிகல் பைபர் ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், சாலையின் தன்மைக்கு ஏற்ப மாறும் இ-ஆக்டிவ் பாடி கன்ட்ரோல் சஸ்பென்ஷன் சிறப்பம்சம்.

இதன் 4.0 லிட்டர் டுவின்-டர்போ வி8 மைல்டு- ஹைபிரிட் டர்போ பெட்ரோல் இன்ஜின், 558 பிஎச்பி பவரையும், 730 என்எம் டார்க் திறனையும் அளிக்கும். 48 வோல்ட் ஹைபிரிட் இகியூ பூஸ்ட்டர் சிஸ்டமும் உள்ளது. இது, 21 பிஎச்பி பவரையும், 249 என்எம் டார்க் திறனை கூடுதலாக கொடுக்கும். 9ஜி டிரோனிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.
எதிர்பார்க்கும் விலை ரூ. 2 கோடி

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement