dinamalar telegram
Advertisement

'சோனி'யின் புதிய இயர்போன்

Share

சோனி நிறுவனத்தின் புதிய 'ஒயர்லெஸ் ஸ்டீரியோ இயர்போன்' இந்த ஆண்டில் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'சோனி டபுள்யு.எப். 1000 எக்ஸ்.எம்.4 ட்ரூ ஒயர்லெஸ் இயர்போன்' குறித்து பல செய்திகள், பல்வேறு தளங்களில் கசிந்து கொண்டிருக்கின்றன.
இந்த இயர்போனில் 'ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலிங்' எனும் தேவையற்ற வெளிப்புற சப்தங்களை நீக்கும் வசதியுடன், கூடுதலாக 'கூகுள் அசிஸ்டென்ட்' சேவையை பெறும் வசதியும் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

மேலும், வடிவமைப்பிலும் சோனியின் முந்தைய தயாரிப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கும். ஒயர்லெஸ் சார்ஜிங் வசதி இருக்கும். பேட்டரி 24 மணி நேரம் தாக்குப் பிடிக்கும் வகையில் இருக்கும். இவ்வாறு செய்திகள் சொல்கின்றன.

நிறைய பிரீமியம் இயர்போன்கள் வந்துகொண்டிருக்கும் இன்றைய நிலையில், சோனியின் தயாரிப்பு எப்படி தாக்குப் பிடிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதன் விலை 20 ஆயிரம் ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement