dinamalar telegram
Advertisement

அழகாய் என்பீல்டு

Share

புதிய தலைமுறை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் விரைவில் களமிறக்கப்பட உள்ளது. தற்போது சோதனை ஓட்டம் நடக்கிறது. இதன் கிளாசிக் 'லுக்கை' தக்க வைத்துள்ளனர். வட்ட வடிவ ஹெட்லேம்ப், எல்இடி டெயில்லேம்ப்ஸ், புதிதாக டிஜிட்டல்-அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், டிரிப்பர் நேவிகேஷன் சிஸ்டம், என்பீல்டு மீட்டியோர் பைக் போன்று உயரமான ஹேண்டில்பார், அலாய் வீல், டியூப்லஸ் டயர், டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், சஸ்பென்ஷனுக்கு முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் போர்க், பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு ஷாக் அப்சார்பர்ஸ் சிறப்பம்சம். இதன் 349 சிசி இன்ஜின் 20.4 பிஎச்பி பவரையும, 27 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்

எதிர்பார்க்கும் விலை: ரூ. 1.80 லட்சம்(எக்ஸ்ஷோரூம்)

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement