dinamalar telegram
Advertisement

ஆசையாய் ஆடி

Share

ஆடி இ-டிரான் சொகுசு எலக்ட்ரிக் கார் விரைவில் அறிமுகமாக உள்ளது. இதற்கான அறிவிப்பு ஆடி இந்தியா இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய கிரில் அமைப்பு, டிஜிட்டல் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்டுகள், தாழ்வான கூரை அமைப்பு, 5 சீட்டர், 20 இன்ச் லைட்வெயிட் அலாய் வீல்கள், இரண்டு டிஜிட்டல் ஸ்கிரீன்(10.1, 8.8 இன்ச்) உடன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், இன்போடெயின்மென்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூப், மல்டிபிள் ஏர்பேக்ஸ், அடாப்டிவ் குரூஸ் கன்ட்ரோல், பார்க்கிங் அசிஸ்ட், மல்டி பங்ஷன் ஸ்டியரிங் வீல், பிரிமியர் பாங் அண்ட் ஒலுாப்சன் சவுண்ட் சிஸ்டம், ஆம்பி யன்ட் லைட் டிங், 360 டிகிரி கேமரா, ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம், ரிஜென ரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் சிறப்பம்சம்.

இதன் இரண்டு மின் மோட்டார்கள், 95 கிலோவாட் லித்தியம் அயான் பேட்டரி சேர்ந்து 402 பிஎச்பி பவரையும், 664 என்எம் டார்க் திறனையும் அளிக்கும். டிசி பாஸ்ட் சார்ஜர்(150 கிலோவாட்) மூலம் 30 நிமிடங்களில் 80 சதவீதம் சார்ஜ் ஏற்றலாம். சாதாரண சார்ஜர்(11 கிலோவாட்) என்றால் 8.5 மணிநேரம் தேவைப்படும். முழுமையான சார்ஜில் 484 கி.மீ., துாரம் பயணிக்கலாம். மணிக்கு அதிகபட்சமாக 200 கி.மீ., வேகத்தில் செல்லும்.

எதிர்பார்க்கும் விலை; ரூ.1கோடி (எக்ஸ்ஷோரூம்)

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement