dinamalar telegram
Advertisement

ஜவ்வரிசி போண்டா

Share

தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி - 3/4 கப்
புளித்த தயிர் - 1 கப்
தண்ணீர் - 1/2 கப்
சீரகம் - 1 டீ ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 2
நறுக்கிய மல்லி தழை - 2 டீ ஸ்பூன்
உப்பு - ருசிக்கு
அரிசி மாவு - 1/4 கப்
நறுக்கிய இஞ்சி - 1 டீ ஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கு

செய்முறை

நன்கு புளித்த தயிருடன், கெட்டியாக பெரிய உருண்டைகளாக உள்ள ஜவ்வரிசி சேர்த்து, ஐந்து மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.ஊறிய ஜவ்வரிசியுடன் வெங்காயம், மல்லி தழை, பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், அரிசி மாவு சேர்த்து, நீர் சேர்க்காமல் கெட்டியாக பிசையவும்.
தேவைப்பட்டால், சிறிது நீர் தெளித்து பிசையலாம். அதிகமாக நீர் சேர்த்து, அதை சமன் செய்ய மாவு சேர்த்தால் ருசியாக இருக்காது. புளித்த தயிர் இல்லாவிட்டால், கலவையில் ஒரு டீ ஸ்பூன் எலுமிச்சை சாறு பிழிந்து கொள்ளவும்.கலவையை சிறு உருண்டைகளாக்கி, நன்கு சூடான எண்ணெயில் போட்டு, மிதமான தீயில், சிவக்க பொரித்து எடுக்கவும். இதற்கு எலுமிச்சை காரம் தொட்டு சாப்பிட்டால், அற்புதமாக இருக்கும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement