dinamalar telegram
Advertisement

பச்சை மிளகாய் பச்சடி

Share

தேவையான பொருட்கள்

பச்சை மிளகாய் - ¼ கிலோ
புளி - பெரிய எலுமிச்சை அளவு
எண்ணெய் - தேவையான அளவு
பூண்டு - 10 பல்
கல் உப்பு - தேவையான அளவு

தாளிக்க…

கடுகு - ¼ டீ ஸ்பூன்
கடலை பருப்பு - ¼ டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - ½ டீ ஸ்பூன்
பூண்டு - 4 பல்

செய்முறை

பச்சை மிளகாயை காம்பு நீக்கி, சுத்தமாக கழுவி, ஈரத்தை துடைத்து விடவும்; நன்கு உலர்வாக இருக்க வேண்டும். சிறிது நேரம் மின்விசிறியின் கீழ் உலர்த்தி, மிளகாயை இரண்டு அல்லது மூன்று துண்டுகளாக்கி கொள்ளவும்.வாணலியில், 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பச்சை மிளகாயை, பூண்டு போட்டு வதக்கவும். மூன்று நிமிடங்கள் வதங்கியதும் எடுத்து வைத்த புளி போட்டு நன்கு வதக்கவும். முழுதாக புளியை போடாமல், சிறு துண்டுகளாக போட்டால் நன்கு வேகும். புளியிலும் தண்ணீர் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இத்துடன் தேவையான அளவு கல் உப்பு சேர்த்து, மூடி போடாமல் வேக வைக்கவும்.நன்கு வதங்கியதும், ஆற வைத்து, மிக்சியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.வாணலியை அடுப்பில் வைத்து, மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, தாளிக்க கொடுத்தவற்றை போட்டு தாளித்து, அதனுடன் அரைத்த மிளகாய் விழுதை கலந்து, அடுப்பை அணைக்கவும். நன்கு ஆறியதும், ஈரம் படாமல் எடுத்து வைத்தால், சூடான சாதம், டிபன் என்று அனைத்திற்கும் ருசியான தொடுகறி இது.ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement