dinamalar telegram
Advertisement

'சூப்பர்' பல்சர்

Share

இளைஞர்களை கவர்ந்து இழுக்கும் வகையில், புதிய பஜாஜ் பல்சர் என்எஸ் 125 பைக் அறிமுகமாகியுள்ளது.

பல்சர் என்எஸ் 160 அடிப்படையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. தற்போது விற்பனையில் இருக்கும் பல்சர் 125 பைக்குடன் ஒப்பிடுகையில் ரூ. 20 ஆயிரம் அதிகம். இதன் பிஎஸ்-6 தரத்திலான 124.45 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர்கூல்டு பியூவல் இன்ஜெக்டட் டிடிஎஸ்-ஐ இன்ஜின், 12 பிஎச்பி பவரையும், 11 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

ஸ்போர்ட்டி வடிவமைப்பு, ஸ்பிளிட் இருக்கை, 12 லிட்டர் பியூவல் டேங்க், டுவின் எல்இடி டெயில் லேம்ப்கள், ஹாலோஜன் ஹெட்லேம்ப், செமி டிஜிட்டல் கன்சோல், முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் போர்க்குகள், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர், 44 கிலோ எடை, கிளாசி மெட்டாலிக் பெயின்ட் பினிஷ்,17 இன்ச் அலாய் வீல், டிஸ்க் பிரேக் சிறப்பம்சம். பீச் புளூ, பியரி ஆரஞ்ச், பர்ன்ட் ரெட், பியூடெர் கிரே என நான்கு வண்ணங்களில் கிடைக்கும்.

விலை: ரூ. 93,690 (எக்ஸ்ஷோரூம்)

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement