dinamalar telegram
Advertisement

பாலக், பனீர் கிரேவி

Share

தேவையான பொருட்கள்
பாலக் கீரை - 1 கட்டு
பனீர் - 200 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 1
பூண்டு - 4 பல்
இஞ்சி - 1 துண்டு
மிளகாய் துாள் - 1 டீ ஸ்பூன்
மல்லி துாள் - 1 டீ ஸ்பூன்
மஞ்சள் - 1/4 டீ ஸ்பூன்
சீரகம் - 1/2 டீ ஸ்பூன்
வெண்ணெய் - 1 டீ ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை
வாணலியில் தண்ணீர் விட்டு, லேசாக கொதி வந்ததும், கீரையின் நிறம் மாறாமல் இருக்க, தேவையான அளவு உப்பு போட்டு வேக விடவும்.
மற்றொரு வாணலியில் வெண்ணெய் சேர்த்து, உருகியதும், சீரகம் போட்டு பொன்னிறமாக பொரிந்ததும், நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும். இஞ்சி, பூண்டு, தக்காளி என்று ஒவ்வொன்றாக சேர்த்து, மூடி போட்டு வேக விடவும்.
பாலக் கீரை வெந்ததும், நீரை வடித்து, வதக்கிய கலவை ஆறியதும், அதனுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
வேறொரு வாணலியை அடுப்பில் வைத்து, சிறிது வெண்ணெய் போட்டு, மஞ்சள், மிளகாய், மல்லித் துாள் சேர்த்து கருகாமல் வதக்கி, அரைத்த கலவையை ஊற்றி, ஒரு கொதி வந்ததும், நறுக்கிய பனீர் துண்டுகளை ஒவ்வென்றாக போட்டு, சிறிது நீர் விட்டு, கலவை கெட்டியானதும், அடுப்பை அணைத்து விடவும்.
பிரஷ் கிரீம் இருந்தால், ஒரு ஸ்பூனில் சிறிது நீர் சேர்த்து கலந்து, அடுப்பை அணைக்க இரண்டு நிமிடங்கள் முன் சேர்த்து இறக்கலாம்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement