dinamalar telegram
Advertisement

ஓரியோ சுவிஸ் பால்

Share

தேவையான பொருட்கள்
ஓரியோ பிஸ்கட் பாக்கெட் - 2
பால் - 2 1/2டேபிள் ஸ்பூன்

செய்முறை
இரண்டு பிஸ்கட்டின் நடுவில் இருக்கும் கிரீமை தனியே எடுத்து வைக்கவும். பிஸ்கட்டை ஒன்றிரண்டாக உடைத்து, மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிஸ்கட் துாளுடன், இரண்டு ஸ்பூன் பால் சேர்த்து, கையில் ஒட்டாமல் வரும் பதத்தில் பிசைந்து, உருட்டி வைக்கவும்.
பிஸ்கட் நடுவில் இருந்து எடுத்த கிரீமில் அரை ஸ்பூன் பால் சேர்த்து கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும். காய்கறிகளை பாதுகாக்கும், 'ஜிப் லாக்' பையின் மேல் பிஸ்கட் கலவையை வைத்து, சப்பாத்தி கட்டையால் உருட்டி, அதன் மேல் கிரீம் தடவி, ஜிப் லாக் பையை சுருட்டி, ஒரு மணி நேரேம், 'பிரிஜ்'ஜில் வைக்கவும்.
அதிக நேரம் வைத்தால் இறுகி விடும்.
அதன் பின் வெளியில் எடுத்து, உருளையாக வெட்டி, குழந்தைகளுக்கு தரலாம். வழக்கமான பிஸ்கட்டை தருவதற்கு பதில் இப்படி செய்து கொடுத்தால், குழந்தைகளுக்கு வித்தியாசமாக இருக்கும்; ஆர்வமாக சாப்பிடுவர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement