dinamalar telegram
Advertisement

கார சப்பாத்தி

Share

தேவையான பொருட்கள்
சீரகம் - 1 டீ ஸ்பூன்
பூண்டு - 8 பல்
தக்காளி - 2
கோதுமை மாவு - 2 கப்
உப்பு - தேவைக்கு
புளிக்காத தயிர் - 2 ஸ்பூன்
நெய் - 3 ஸ்பூன்
மிளகாய் துாள் - 1 ஸ்பூன்

செய்முறை
தக்காளியுடன் சீரகம், பூண்டு சேர்த்து விழுதாக அரைக்கவும். இது ஒரு கப் அளவு இருக்கும். இதை விட இரண்டு மடங்கு, இரண்டு கப் கோதுமை மாவு சேர்த்து, வழக்கமாக சப்பாத்திக்கு பிசைவது போல பிசைந்து, அதன் பின் தயிர் சேர்த்து பிசையவும். மாவு உலராமல் இருக்க, மேலே லேசாக எண்ணெய் தடவி, அரை மணி நேரம் மூடி வைக்கவும்.
நெய்யையும், மிளகாய் துாளையும் சிட்டிகை உப்பு சேர்த்து, ஒரு கிண்ணத்தில் நன்கு கலந்து வைக்கவும்.
சப்பாத்தி மாவை சிறு உருண்டைகளாக பிரித்து, வட்டமாக தேய்த்து, நடுவில் மிளகாய் கலவையை சீராக பரப்பி, மீண்டும் உருட்டி, தேய்த்து வாணலியில் மிதமான சூட்டில், நெய் ஊற்றி, ஒரு பக்கத்தில் லேசாக குமிழ்கள் வந்ததும், அடுத்த பக்கம் போட்டு எடுக்கவும்.
தொடு கறியே இதற்கு அவசியம் இல்லை; வெள்ளரிக்காய் துண்டு, தயிர் பச்சடி வைத்து அல்லது வெறுமனே சாப்பிடலாம்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement