dinamalar telegram
Advertisement

கேப்சிகம் பெப்பர் பிரை

Share

தேவையான பொருட்கள்
குடை மிளகாய் - 1
வெங்காயம் - 1
மிளகு துாள் - 1 டீ ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீ ஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு

செய்முறை
வெங்காயத்தை நறுக்கி, வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கும் போதே, தேவையான அளவு உப்பு சேர்த்தால், சுலபமாக வதங்கும்; வாசனையும் நன்றாக இருக்கும்.
அதன்பின், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கி, நறுக்கிய குடை மிளகாய் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். அதன் பின், மிளகு துாள் சேர்த்து, ஒரு நிமிடம் வதங்கியதும், மூடி வைத்து, அடுப்பை அணைத்து விடலாம். வாணலியின் சூட்டிலேயே குடை மிளகாய் நன்கு வதங்கி விடும்.
உடனடியாக தொடுகறி தேவைப்படும் போது எளிமையாக இதை செய்து விடலாம். சாம்பார் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement