dinamalar telegram
Advertisement

ராஜ்மா கிரேவி!

Share

தேவையான பொருட்கள்
ராஜ்மா - 1 கப்
வெண்ணெய் - 3 டீ ஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 4 பல்
கரம் மசாலா - 1/4 டீ ஸ்பூன்
மஞ்சள் துாள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
காய்ந்த வெந்தயக் கீரை - சிறிது
உலர் மாங்காய் துாள் - 1 டீ ஸ்பூன்

செய்முறை
ராஜ்மாவை, முதல் நாள் இரவே ஊற வைத்து, குக்கரில் தேவையான அளவு நீர் விட்டு, ஐந்து விசில் விட்டு வேக வைக்கவும். பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாயை இடித்துக் கொள்ளவும். கொதிக்கும் நீரில் தக்காளியைப் போட்டு, தோல் நீக்கி, விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து, வெண்ணெய் சேர்த்து, சீரகம், நறுக்கிய வெங்காயம் வதக்கி, இடித்த விழுது போட்டு வதங்கியதும், அரைத்த தக்காளி சேர்த்து வதக்கவும். மசாலா துாள், உப்பு சேர்த்து கரியாகாமல் வதக்கி, இதனுடன் ராஜ்மா வேக வைத்த நீரை, சிறிது சிறிதாக ஊற்றி கலந்து கொள்ளவும். கலவை கொதித்ததும், ராஜ்மாவை சேர்த்து லேசாக மசித்து விடவும். இத்துடன் சற்றே புளிப்பு தன்மைக்காக விரும்பினால் மாங்காய் துாள் சேர்க்கலாம்.
அடுப்பை அணைக்கும் போது, சிறிது காய்ந்த வெந்தயக் கீரையை கசக்கி போடவும். ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து, சப்பாத்தி அல்லது சூடான சாதத்திற்கு பரிமாறவும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement