dinamalar telegram
Advertisement

திராட்சை ஜூஸ்

Share

தேவையான பொருட்கள்
கறுப்பு திராட்சை - 1 கிலோ
தேன் - தேவையான அளவு
ஐஸ் கட்டிகள் - தேவைக்கு

செய்முறை
திராட்சையின் காம்பை சுத்தமாக நீக்கி, நீரில் நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும். கொதிக்கும் நீரில் கழுவிய திராட்சையை போட்டு, இரண்டு கொதி வந்ததும், அடுப்பை அணைக்கவும். கொதிக்கும் போது, மேலே படரும் அழுக்கை எடுத்துவிட வேண்டும்.
ஆறியதும், அதிகப்படியான நீரை வடிகட்டி தனியே வைத்து விட்டு, மிக்சியில் திராட்சையை அடித்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். ஐஸ் கட்டிகள், தேவைப்பட்டால் மீதி இருக்கும் நீர், தேவையான அளவு தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம்.
திராட்சையை அப்படியே போட்டு, சர்க்கரை சேர்த்து மிக்சியில் அடித்து குடித்தால், அதில் உள்ள புளிப்பு தன்மை அப்படியே இருக்கும். சர்க்கரை அதிக அளவில் போட வேண்டியிருக்கும். இதைத் தவிர்ப்பதற்கே இது போல கொதிக்க வைத்து சாறு எடுக்க வேண்டும். இதை, இரண்டு, மூன்று நாட்களுக்கு பயன்படுத்தலாம்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement