சீனாவைச் சேர்ந்த, 'ஒன்பிளஸ்' நிறுவனத்தின் துணை நிறுவனரான, கார்ல் பை, அந்நிறுவனத்திலிருந்து விலகி, 'நத்திங்' எனும் பெயரில், புதிதாக, ஒரு, 'ஸ்டார்ட் அப்' நிறுவனத்தை அண்மையில் துவங்கியது, அனைவரும் அறிந்தது தான்.
இந்நிறுவனம் என்ன மாதிரியான தயாரிப்புகளை அறிமுகம் செய்ய இருக்கிறது என்பது குறித்து,
அறிய துறையினர் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.
இந்நிறுவனம், முதல் கட்டமாக, 'ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ' இயர்பட்சை அறிமுகம் செய்ய
இருப்பதாக பேச்சுகள் எழுந்தன. இந்நிலையில், 'நத்திங்' நிறுவனம், 'எசென்ஷியல்' எனும் ஸ்மார்ட்போன் பிராண்டை கையகப்படுத்தி உள்ளது.
இதையடுத்து, ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
'எசென்ஷியல்' போன், 2017ல், முதலில் அறிமுகம் ஆனது. ஆனால், விற்பனை சொல்லிக்கொள்கிற மாதிரி அமையவில்லை. ஒருகட்டத்தில், தயாரிப்பு நின்றுபோனது.
தற்போது, 'நத்திங் டெக்னாலஜிஸ்' வசம் இந்த பிராண்டு வந்துள்ளது.
'நத்திங்'கிலிருந்து 'சம்திங்'
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!