dinamalar telegram
Advertisement

இது புதுசு : 'சாம்சங் கேலக்ஸி ஏ 12'

Share

'சாம்சங் கேலக்ஸி ஏ 12' ஸ்மார்ட்போன், இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. 'கேலக்ஸி ஏ' வரிசையில், லேட்டஸ்ட் மாடல் போன் இதுவாகும்.
இந்த போனின் குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சங்களாக, பின்புறத்தில் நான்கு கேமரா இருப்பது, 15 வாட் சார்ஜிங், 128 ஜி.பி., சேமிப்பகம், 5,000 எம்.ஏ.எச்., பேட்டரி ஆகியவற்றை சொல்லலாம்.
மூன்று வண்ணங்களில் இந்த போன் அறிமுகம் ஆகியுள்ளது. 'ரெட்மி நோட் 9 புரோ', 'ரியல்மி 7', 'ஒப்போ ஏ 52' ஆகிய போன்களுக்கு போட்டியாக இது இருக்கும்.


விலை:
4ஜி.பி., X 64 ஜி.பி.,: 12,999 ரூபாய்


4ஜி.பி., X 128 ஜி.பி.,: 13,999 ரூபாய்


'எக்ஸ்பாக்ஸ்' ஹெட்செட்


அண்மையில், 'எக்ஸ்பாக்ஸ்' ஒயர்லெஸ் ஹெட்செட் அறிமுகம் ஆகியிருக்கிறது. 'டால்பி அட்மோஸ்' சப்போர்ட்டுடன் கூடிய இந்த ஹெட்போன், 'எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ், எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எஸ், எக்ஸ்பாக்ஸ் ஒன்' மற்றும், 'விண்டோஸ் 10' மென்பொருள் கொண்ட சாதனங்கள் ஆகியவற்றுக்காக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இதன் பேட்டரி திறன், 15 மணி நேரம் வரை நீடிக்கும். விலை, 7,300 ரூபாய் ஆகிறது. ஆனாலும், அறிமுகம் ஆனதுமே விற்று தீர்ந்துவிட்டது. முன்பதிவும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுவிட்டது.
இந்தியாவுக்கு எப்போது வரும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.


பிலிப்ஸ் சவுண்டு பார்
'
பிலிப்ஸ்' நிறுவனம், இரண்டு புதிய சவுண்டு பார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 'பிலிப்ஸ் டி.ஏ.பி., 7305' மற்றும், 'பிலிப்ஸ் டி.ஏ.பி., 5305' எனும் இந்த இரண்டு சவுண்டு பார்களும், ஒயர்லெஸ் சப்வூபருடன் வந்துள்ளன.இரண்டுமே, 2.1 சவுண்டு சேனல் கொண்டவை. இதில், 'பிலிப்ஸ் டி.ஏ.பி., 7305' சவுண்டுபார், 'பிலிப்ஸ் டி.ஏ.பி., 5305' சவுண்டுபாரை விட, அதிக அவுட்புட் கொண்டதாகும். சப்வூபருடன் சேர்த்து முந்தையது, 300 வாட் அவுட்புட்டும்; பிந்தையது, 70 வாட் அவுட்புட்டும் கொண்டதாகும்.


விலை: பிலிப்ஸ்

டி.ஏ.பி., 7305: 21,990 ரூபாய்


பிலிப்ஸ் டி.ஏ.பி., 5305: 14,990 ரூபாய்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement