வாட்ஸ் ஆப் நிறுவனத்தின், தனியுரிமை கொள்கை விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது.
இது குறித்த விளக்க அறிவிப்புகள், விரைவில் வாடிக்கையாளர்களுக்கு வந்து சேரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொள்கையை ஏற்பதற்கான காலக்கெடு, மே, 15 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், நமக்கு முன் இருக்கும் வாய்ப்புகள் இரண்டு. ஒன்று, நிபந்தனைகளை ஏற்று தொடர்வது. அல்லது வேறு செயலிகளுக்கு மாறுவது.
வாட்ஸ் ஆப், புதிய தனியுரிமை கொள்கை குறித்து இன்னும் முற்றாக தெளிவு பெறப்படவில்லை. இப்போதைக்கு நமது அரட்டைகள், குரல் வழி செய்திகள், வீடியோ அழைப்புகள் பாதுகாப்பானதாக இருக்கின்றன. குறைந்தபட்சம் இன்னும் சிறிது காலத்துக்காவது.
வாட்ஸ் ஆப், நமது இருப்பிடம் குறித்த தகவலை துல்லியமாக எடுத்து பகிராவிட்டாலும், நாம் எந்த பகுதியில் இருக்கிறோம் என்பது குறித்த தகவல் பகிரப்படும் வாய்ப்பு இருக்கிறது. அதை அடிப்படையாக வைத்து, வணிகம் சம்பந்தப்பட்ட தகவல்கள் இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் ஆகியவற்றில் நமக்கு வரக்கூடும்.
பேஸ்புக் நமது உரையாடல்களை படிக்காது என்றும், அழைப்புகளை கேட்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வணிகக் கணக்குகளுக்கு வேறு சில கொள்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய நாடுகளில், இந்நிறுவனத்தின் தனியுரிமை கொள்கைகள் வேறுபட்டவை. பேஸ்புக் அதன் தயாரிப்புகள் அல்லது விளம்பரங்களை மேம்படுத்த, தரவுகளை பகிர்வதில்லை என தெளிவாக, 'வாட்ஸ் ஆப்' தெரிவித்துள்ளது. ஆனால் இந்தியாவில் வேறு நிலை எடுத்துள்ளது.
ஏன் இந்த இரட்டை நிலை?
தரவுகளை பொறுப்புடன் பயன்படுத்துவதற்கான சட்டங்கள் நம்மிடம் இல்லை. தரவு பாதுகாப்பு குறித்த மசோதா இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. இதெல்லாம் தான், இத்தகைய நிறுவனங்களுக்கு வசதியாக இருக்கிறது.
வாட்ஸ் ஆப்: இரட்டை நிலை
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!