dinamalar telegram
Advertisement

இது புதுசு - 'கேலக்ஸி எம் 12'

Share

சாம்சங் நிறுவனம், அதன், 'கேலக்ஸி எம் 12' ஸ்மார்ட்போனை அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. 'கேலக்ஸி எம் 11' ஸ்மார்ட்போனை அடுத்து, இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த போனின் குறிப்பிடத்தக்க சிறப்புஅம்சங்களாக சொல்ல வேண்டும் எனில், 6,000 எம்.ஏ.எச்., பேட்டரி திறன், பக்கவாட்டில் அமைக்கப்பட்டிருக்கும், 'பிங்கர்பிரிண்ட் சென்சார்' என சொல்லலாம்.
கறுப்பு, நீலம், பச்சை என மூன்று வண்ணங்களில் இந்த போன் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும், 6.5 அங்குல திரையுடன், 3, 4, 6 ஜி.பி., என மூன்று தேர்வுகளில் வந்துள்ளது. அத்துடன், 32, 64, 128 ஜி.பி., என மூன்று வகை சேமிப்பு திறன் கொண்டதாகவும் உள்ளது.
இந்த மூன்று வகை போன்களையும் மைக்ரோ எஸ்.டி., கார்டு மூலமாக, சேமிப்பு வசதியை, 1 டி.பி., வரை அதிகரித்துக் கொள்ள முடியும். 48 எம்.பி., கேமரா வசதியும் உள்ளது. முதற்கட்டமாக வியட்னாமில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விலை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எதிர்பார்க்கப்படும் விலை: 10,500 ரூபாய்.

'கேலக்ஸி எம்.02'
இந்தியாவில், சகாய விலை போன்கள் வரிசையில், புதிதாக, 'சாம்சங் கேலக்ஸி எம்.02' எனும் ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகியுள்ளது. 'சாம்சங்' தயாரிப்பான இந்த போன், 'போகோ சி3, ரெட்மி 9, ரியல்மி சி 15, மைக்ரோமேக்ஸ் 1 பி' ஆகிய போன்களுக்கு போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது.
இந்த போன், 2ஜி.பி., ரேம்; 32 ஜி.பி., சேமிப்பு திறன் மற்றும் 3 ஜி.பி., ரேம், 32 ஜி.பி., சேமிப்பு திறன் கொண்ட இரு விதங்களில் வந்துள்ளது. கறுப்பு, நீலம், சாம்பல், சிவப்பு என நான்கு வண்ணங்களில் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த போன், 6.5 அங்குல எச்.டி., மற்றும் 'இன்பினிட்டி வி' திரையுடனும், 5,000 எம்.ஏ.எச்., பேட்டரி திறனுடனும் வந்துள்ளது.

அறிமுக விலை:
2ஜி.பி., X 32 ஜி.பி., : 6,799 ரூபாய் - 3 ஜி.பி., X 32 ஜி.பி., : 7,299 ரூபாய்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement