dinamalar telegram
Advertisement

டைட்டன் ஸ்மார்ட் வாட்சுகள்

Share

டைட்டன் நிறுவனம், 'டிராக்யூ' எனும் புதிய பிராண்டு பெயரில், ஸ்மார்ட் வாட்சுகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த அணியக்கூடிய சாதனங்கள், விளையாட்டு ஆர்வலர்களை மனதில் கொண்டு, பெங்களூருவில் உள்ள, டைட்டன் வடிவமைப்பு மையத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பிராண்டு வரிசையில், 'டைட்டன் டிராக்யூ லைட், டிராக்யூ கார்டியோ, டிராக்யூ டிரையத்தலான்' என, மூன்று ஸ்மார்ட் வாட்சுகளை அறிமுகம் செய்துள்ளது.

இந்த வாட்சுகளில், ஜி.பி.எஸ்., இதய துடிப்பு கண்காணிப்பு, பளிச்சிடும் வண்ணத் தேர்வுகள் போன்ற பல வசதிகள் உள்ளன. இந்த ஸ்மார்ட் வாட்சுகளை, 'டைட்டன் ஆன்லைன் ஸ்டோர்கள்' வாயிலாகவும்; பிற முன்னணி மின்னணு வர்த்தக நிறுவனங்கள் மூலமாகவும் பெறலாம்.

விலை:

டைட்டன் டார்க்யூ லைட்: 3,999 ரூபாய்
டைட்டன் டார்க்யூ கார்டியோ: 16, 999 ரூபாய்
டைட்டன் டார்க்யூ டிரையத்தலான்: 17,999 ரூபாய்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement