dinamalar telegram
Advertisement

மின்னாத 'மினி'

Share

'ஐபோன் 12 மினி' ஸ்மார்ட்போன் தயாரிப்பை நிறுத்திவிட, 'ஆப்பிள்' நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் கசிகின்றன. காரணம், இந்த போனுக்கு, மக்களிடம் அவ்வளவு அதிக வரவேற்பு கிடைக்காமல் போனது தான் என்கின்றனர்.

இந்த போனுடன் இணைந்து வெளியிடப்பட்ட, 'ஐபோன் 12, ஐபோன் 12 புரோ, ஐபோன் 12 புரோ மேக்ஸ்' ஆகிய போன்கள் அளவுக்கு, 'மினி' மக்களிடம் எடுபடவில்லை.

அளவில் சிறியதாகவும்; அதிக செயல்திறனும் கொண்ட போனை மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்பதை அறிந்து, அதற்காக அறிமுகம் ஆனது தான், 'ஐபோன் 12 மினி'. ஆனால், மக்களின் எதிர்பார்ப்பை இந்த போன் சரியாக நிறைவேற்றவில்லை என்ற கருத்து உள்ளது.

கடந்த அக்டோபர், நவம்பர் மாதங் களில் மட்டும், மொத்தம் விற்பனை ஆன ஐபோன்களில், 'ஐபோன் 12 மினி'யின் பங்கு வெறும், 6 சதவீதமே என்கிறது, ஓர் ஆய்வு. இதையடுத்து, நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில், இந்த போனின் தயாரிப்பு முற்றிலும் நின்றுவிடும் என்கின்றனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement