dinamalar telegram
Advertisement

வரப் போகுது - நோக்கியா 5ஜி போன்கள்

Share

நோக்கியா பிராண்டுக்கான உரிமம் பெற்றிருக்கும், 'எச்.எம்.டி., குளோபல்' நிறுவனம், இந்தியாவில், பெரிய அளவில், 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்த ஆண்டில் அறிமுகம் செய்யும் முயற்சியில் தீவிரமாக இறங்கி இருக்கிறது.
ஏற்கனவே, பியூச்சர் போன் மற்றும் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் தயாரிக்க, டிக்ஸான், லாவா ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் அடுத்தகட்டமாக, 5ஜி போன்களை தயாரித்து, சந்தைப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.
இந்திய நிறுவனங்களுடன் கூட்டு வைத்து, இந்தியாவில் தயாரிப்பதுடன்; இங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும், 'எச்.எம்.டி., குளோபல்' திட்டமிட்டுள்ளது.

மீண்டும் பிளாக்பெர்ரி போன்
இன்றைய ஸ்மார்ட்போன்களுக்கு முன்னோடியான, பிளாக்பெர்ரி, ஒருகட்டத்தில் போன் தயாரிப்பை நிறுத்திவிட்டு, மென்பொருளில் மட்டும் கவனம் செலுத்த சென்று விட்டது. டி.சி.எல்., நிறுவனம், பிளாக்பெர்ரி பிராண்டு உரிமத்தை பெற்றது.
தற்போது பிளாக்பெர்ரியிடம் புதிதாக உரிமம் பெற்றுள்ள, அமெரிக்காவை சேர்ந்த, 'ஆன்வேர்டு மொபிலிட்டி' நிறுவனம், இந்த ஆண்டில், புதிய பிளாக்பெர்ரி போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த போன்கள், 5ஜி வசதி கொண்டதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
வடஅமெரிக்கா, ஐரோப்பாவில் மட்டுமின்றி; ஆசிய சந்தைகளிலும், புதிய பிளாக்பெர்ரி போனை அறிமுகம் செய்ய, 'ஆன்வேர்டுமொபிலிட்டி' திட்டமிட்டிருக்கிறது. புதிய பிளாக்பெர்ரி போன்கள், அதன் பிரபல அம்சமான, 'பிசிக்கல் கீ போர்டு' உடன் வருவதாகவும் தெரிவித்துள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement