dinamalar telegram
Advertisement

சிறப்பை இழக்கும் சீன செயலிகள்

Share

ஸ்மார்ட்போன் விற்பனையில் சீன தயாரிப்புகள் இன்னும் கொடிகட்டி பறந்து கொண்டிருந்தாலும், செயலிகள் விஷயத்தில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. 'ஆப்ஸ்பிளையர்' எனும் நிறுவன அறிக்கையின்படி, கடந்த ஆண்டு இறுதியில், அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில், 40 சதவீத செயலிகள், இந்திய தயாரிப்புகள் என தெரியவந்துள்ளது. அதேசமயம் சீன செயலிகள் பதிவிறக்கம் சரிந்துள்ளது.

இந்திய செயலிகளைப் பொறுத்தவரை பெரும்பாலானவை, பிராந்திய மொழிகளில் கவனம் செலுத்துபவையாக இருக்கின்றன. இதன் காரணமாக இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில், இத்தகைய செயலிகளை பயன்படுத்துபவர்கள் அதிகரித்திருக்கின்றனர்.

இருப்பினும், ஸ்மார்ட்போன்கள் விற்பனையை பொறுத்தவரை, சீன நிறுவனங்களே, இந்திய சந்தையில் கோலோச்சி வருகின்றன. கடந்த ஆண்டில், இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில், சீன நிறுவனங்களின் பங்களிப்பு, 72 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டில் இது, 77 சதவீதமாக அதிகரித்துள்ளது என்கிறது, 'கவுண்டர்பாயின்ட்' அறிக்கை. 'தாய் உறவு, பிள்ளை பகை' என்ற கதையாக இருக்கிறது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • mathimandhiri - chennai,இந்தியா

    மத்தியில் எதற்கும் அஞ்சாத சளைக்காத மிரட்டலுக்குப் பணியாத வலுவான துணிவான ஒரு தலைமை இருப்பதால் இதெல்லாம் சாத்தியமாகிறது. ஆனால் இதுவே பழைய கமிஷன் வங்கிகளின் ஆட்சியாக இருந்தால் அவன் காலடியில் நாட்டை அடகு வைத்து செயலிகள் இறக்குமதி, பதிவிறக்கம் தான் இருமடங்காக நடந்திருக்கும். இவனுக காட்டில் கமிஷன் அடை மழையாய் அடித்திருக்கும்-வெளி நாட்டு கணக்குகளில். இது தான் வித்தியாசம்.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement