dinamalar telegram
Advertisement

ஒன்றுமில்லை!

Share

சீனாவின், 'ஒன்பிளஸ்' நிறுவனத்தின் துணை நிறுவனர் கார்ல் பி, தனியாக ஒரு நிறுவனத்தை துவங்க இருப்பதாக செய்திகள் வந்ததிலிருந்து, அவர் என்ன நிறுவனத்தை துவங்க இருக்கிறார்; அதன் பெயர் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் மிகவும் அதிகமாக இருந்தன.

இந்நிலையில், சமீபத்தில் அவர் தன்னுடைய நிறுவனத்தின் பெயரை வெளியிட்டார். அதன் பெயர், 'நத்திங்.' அதாவது, 'ஒன்றுமில்லை' என பெயர் வைத்திருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அடுத்த வாரத்தில், இந்நிறுவனத்திலிருந்து புதிய அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நிறுவனத்தின் தயாரிப்பு ஏதாவது அறிமுகம் செய்யப்படலாம் என கருதப்படுகிறது.

லண்டனை அடிப்படையாக கொண்ட, 'நத்திங்' ஒரு நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனம் என, கார்ல் தெரிவித்துள்ளார். இந்த நிறுவனத்தில், பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களை சேர்ந்தவர்கள் முதலீடு செய்துள்ளனர். 'ஐபாடை' கண்டுபிடித்த டோனி பேடுவெல், 'ரெட்டிட்' நிறுவன தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் ஹப்மேன் என பல பிரபலங்கள் முதலீடுகளை மேற்கொண்டுள்ளனர்.

'நத்திங்' நிறுவனம், மக்களுக்கும் தொழில்நுட்பத்துக்கும் இடையேயான தடையை நீக்குவதை இலக்காக கொண்டு செயல்படும் என்று தெரிவித்திருக்கிறார், கார்ல்.

'நத்திங்' நிறுவனம், அதன் ஸ்மார்ட் சாதனங்களை, இந்த ஆண்டின் பிற்பாதியிலிருந்து வெளியிட துவங்கும் என துவக்கத்தில் சொல்லப்பட்டது. ஆனால், இப்போது அடுத்த வாரம் வெளியிடப்படலாம் என செய்திகள் வருகின்றன. இருப்பினும், என்ன மாதிரியான சாதனங்கள் என்பது குறித்து இன்னும் கோடிட்டு காட்டப்படவில்லை.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement