dinamalar telegram
Advertisement

11 பயிர் ரகங்கள் வெளியிட்டது வேளாண் பல்கலை - விவசாயிகளுக்கு 'பொங்கல் பரிசு'

Share

கோவை வேளாண் பல்கலையில் நேற்று நடந்த பொங்கல் திருவிழாவில், விவசாயிகளுக்கு பொங்கல் பரிசாக, 11 புதிய பயிர் ரகங்கள் வெளியிடப்பட்டன.
தமிழ்நாடு வேளாண் பல்கலையில், நேற்று பொங்கல் திருவிழா நடந்தது. வேளாண் பயிர்கள் -6, தோட்டக்கலை பயிர்கள் -4 வனப்பயிர் ஒன்று என, 11 ரகங்களை துணைவேந்தர் குமார் வெளியிட்டார். புதிய ரகங்கள் விபரம்:

1.நெல் கோ-54:
தமிழகத்தின் சொர்ணாவாரி, கார், குறுவை மற்றும் நவரை பருவங்களில் வளரக்கூடிய குறுகிய கால (110-115 நாள்) ரகம். ஹெக்டேருக்கு, 6,400 கிலோ மகசூல் கிடைக்கும். மத்திய சன்ன அரிசி ரகம்.

2. நெல் ஏ.டி.டீ.55:
கார், குறுவை மற்றும் கோடை பருவத்துக்கு ஏற்ற ரகம். குறுகிய கால (115 நாள்) ரகம். ஹெக்டேருக்கு, 6,000 கிலோ மகசூல் கிடைக்கும். பாக்டீரியா கருகல் நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்டது. சன்ன அரிசி ரகம்.

3. நெல் டி.ஆர்.ஒய்- 4:
இது களர் மற்றும் உவர் நிலங்களுக்கு ஏற்றது. மத்தியகால (125-130 நாள்) ரகமாகும். சம்பா, தாளாடி, பின்சம்பா பருவத்துக்கு ஏற்றது. பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டது. ஹெக்டேருக்கு, 5,800 கிலோ மகசூல் கிடைக்கும்.

4. கேழ்வரகு ஏ.டி.எல்-1:
இறவையில் ஹெக்டேருக்கு, 3,130 கிலோ; மானாவாரியில், 2,900 கிலோ கொடுக்க வல்லது. குறுகிய வயதை கொண்ட, 110 நாள் ரகம். குலைநோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்டது. சாயாமல் முதிர்வடையும் தண்டு திறன், கதிரில் தானியங்கள் எளிதாக பிரியும் தன்மையால் இயந்திர அறுவடைக்கு ஏற்றது.

5.வரகு ஏ.டி.எல்-1:
வறட்சியை தாங்கி வளரும் தன்மை கொண்டது. 110 நாட்கள் வயது கொண்டது. ஹெக்டருக்கு, 2,500 கிலோ என்ற அளவில் தானிய மகசூலும், 4,400 கிலோ என்ற அளவில் தட்டை மகசூல் கொடுக்கும்.

6. உளுந்து கோ-7:
இந்த ரகம் ஆடி, புரட்டாசி பட்டத்துக்கு ஏற்றது. 60 முதல் 65 நாளில் முதிர்ச்சி அடைந்து, ஹெக்டேருக்கு,880 கிலோ என்ற அளவில் மகசூல் கொடுக்கும். மஞ்சள் தேமல் நோயை எதிர்க்கும் திறன் கொண்டது.

7. கத்தரி வி.எம்.ஆர் -2:
இந்த ரகம், 140 நாள் வயதுடையது. காய்கள் அடர் ஊதா நிறத்துடன், அடிப்பகுதியில் பச்சை புள்ளிகளை கொண்டிருக்கும். காய் எடை 100 முதல் 150 கிராம், செடிக்கு 2 முதல் 2.5 கிலோ எடை இருக்கும். ஹெக்டேருக்கு, 50 டன் மகசூல் கிடைக்கும்.

8. பலா பி.எல்.ஆர்-3:
பல ஆண்டு ரகமான பாலில்லா பலா ஜூலை முதல் டிச., வரை மகசூல் கொடுக்கும். ஒரு பழம், 5 கிலோ எடை இருக்கும். ஒரு மரத்தில், 200 பழங்கள் வரை காய்க்கும். மிகக்குறைந்த பால் தன்மை இருக்கும். பழங்களில் அஸ்கார்பிக் அமிலம் கிராமுக்கு 4.35 மி.கி., இருக்கும். சுளைகள் அதிக இனிப்புடன் இருக்கும்.

9. குடம்புள்ளி பி.பி.ஐ.(கு)-1:
பல்லாண்டு பழப்பயிர். இது சமையலுக்கு ஏற்றது. காய்கள் புளிப்பு தன்மையோடு இருக்கும். மரத்துக்கு சராசரியாக, 750 பழங்கள் வீதம், 120 கிலோ மகசூல் கொடுக்கும். முதிர்ந்த பழத்தில் ஹைட்ராக்சி சிட்ரிக் அமிலம், 20.67 சதவீதத்தில் உள்ளது. இந்த அமிலம் உடற்பருமனை குறைக்கும் தன்மை கொண்டது.

10. விளாம்பழம் டபிள்யூ எப்.எல்-3:
பல்லாண்டு பழப்பயிர். ஒரு மரத்துக்கு, 140 கிலோ என்ற அளவில் மகசூல் கிடைக்கும். பழங்கள், பெரிய அளவில், 450 கிராம் எடையுடன் சிறந்த மணத்துடன், குறைவான புளிப்பு மற்றும் நல்ல இனிப்புடன் இருக்கும். புரதச்சத்து, பொட்டாசியம், கால்சியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட் அதிகம் கொண்டது.

11.மலைவேம்பு எம்.டி.பி.-3:
இது ஒரு வனப்பயிர்; வேகமாக வளரும்; இலையுதிர் மரம். எட்டு முதல் பத்து ஆண்டுக்குள் அறுவடை செய்ய ஏற்றது. மரத்துக்கு 500 முதல் 700 கிலோ வீதம் ஹெக்டேருக்கு, 50 முதல் 70 டன்கள் வரை மகசூல் கிடைக்கும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (4)

  • Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    Educate the farmer's to use the paddy which can withstand extreme climatic conditions like heavy rain or less rain, etc

  • Hari - chennai,சவுதி அரேபியா

    தமிழக வேளாண்துறைக்கு நன்றி விவசாயிகளுக்கு இந்த ரகங்கள் தடை இன்றி கிடைக்க அரசு ஏற்படு செய்யணும்.

    • NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா

      கோவை தமிழ்நாடு வேளாண்மை துறைக்கு கால் பண்ணி பாருங்க , நோகடிக்குறாங்க

  • NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா

    இவ்வளவு சொன்னீங்க எப்படி ஆர்டர் பண்ணலாம? இல்லை சும்மா நானும் உள்ளேன் ஐயா மக்களா?

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement