dinamalar telegram
Advertisement

அடடா ஆச்சரியம் - சூரிய ஒளியில் இயங்கும் 'டிவி' ரிமோட்

Share

சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் புதிய டிவி ரிமோட்டுகளுக்கு, இனி பேட்டரி தேவைப்படாது. ரீசார்ஜ் செய்யவும் வேண்டியதில்லை. காரணம், இந்த ரிமோட்டுகள் சூரிய ஒளியில் இயங்கும் என்பது தான். சாம்சங் நிறுவனம், இனி அறிமுகம் செய்ய இருக்கும், 'நியோ க்யு.எல்.இ.டி., டிவி'யின் ரிமோட்டுகளில், பேட்டரி மாற்றுவது அல்லது சார்ஜ் ஏற்றுவது போன்ற எந்த தேவையும் இருக்காது.
இந்த ரிமோட்டின் பின்பக்கத்தில் இருக்கும் சோலார் செல்கள், அறையின் வெளிச்சத்தை பயன்படுத்தி சார்ஜ் ஆகிக்கொள்ளும். ஒருவேளை, தேவைப்பட்டால், யு.எஸ்.பி., போர்ட் மூலமாகவும் சார்ஜ் ஏற்றும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ரிமோட்டுகள், இரண்டு ஆண்டுகள் தாக்குப்பிடிக்கும் என்றும், மறு சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகளை இதன் தயாரிப்பில் பயன்படுத்து வதாகவும், சாம்சங் தெரிவித்துள்ளது. இந்த ரிமோட்டின் எடை, 31 கிராம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரிய ஒளியில் சார்ஜ் ஆகிக்கொள்ளும் வகையில் இந்த ரிமோட்டுகள் தயாரிக்கப்படுவதால், இவை, பேட்டரி செல்கள் உபயோகத்தை குறைப்பதாகவும், சுற்றுச்சூழலை பாதிக்காமலும் இருக்கும். சாம்சங் நிறைய டி.வி.களை விற்பனை செய்து வருகிறது. இவற்றுக்கான ரிமோட்டுகளை, சூரிய ஒளி சார்ஜுக்கு மாற்றினால், 2 கோடி ஏ.ஏ.ஏ., பேட்டரி செல்கள் குப்பைகளுக்கு போய்ச் சேர்வதை தடுக்க முடியும். இதனால், 200 டன் கழிவுகள் சேராமல் தடுக்க முடியும் என்கிறது, சாம்சங்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    ஆஹா இது இந்தியாவுக்கு வேண்டியதல்லவா இதுபோல பேன், பிரிட்ஜ், கைத்தொலைபேசி, டிவி, என்று எல்லாத்துக்கும் சோலார் பவரை கொண்டு வாருங்கள். இந்திய ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் இதில் ஈடுபடலாமே

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement