இளைஞர்கள் மத்தியில் டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டருக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
இதையடுத்து டிவிஎஸ் ஜூபிட்டர் ஸ்கூட்டரிலும் 125 சிசி மாடலை, மே மாதத்தில் களமிறக்க உள்ளனர். இதன் 124.8 சிசி இன்ஜின் 9.38 பிஎச்பி பவரையும், 10.5 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், புளூடூத் வசதி, அலைபேசியை இணைக்க உதவும் 'ஸ்மார்ட்எக்ஸ்கனெக்ட்' போன்ற நவீன தொழில்நுட்பங்கள் இடம் பெறலாம்.
எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டெயில்லைட், ஷீட் மெட்டல்/அலாய் வீல், சத்தம் இல்லாமல் ஸ்டார்ட் செய்யும் 'ஐ--டச்ஸ்டார்ட்' தொழில்நுட்பம், வெளிப்புறத்தில் பெட்ரோல் டேங்க் மூடி, பெரிய ஸ்டோரேஜ், இரட்டை வண்ண சீட், 12 இன்ச் டியூப்லஸ் டயர்கள், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் சிறப்பம்சம். தற்போதைய 110 சிசி மாடலுடன் ஒப்பிடுகையில் விலை ரூ.2500 அதிகரிக்கப் படலாம்.
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.70,000-79,000(எக்ஸ்ஷோரூம்)
கோவை டீலர்:
Sakthisaradha TVS - 90472 33133
சென்னை டீலர்கள்:
Ramkay TVS - 73036 58549
SBM TVS - 78110 67292
Brilliant TVS - 78110 58135
ஜொலிக்கும் ஜூபிட்டர்
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!