dinamalar telegram
Advertisement

டிசம்பர்

Share

தமிழகம்
டிச., 2: முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லுாரி திறப்பு.
டிச., 3: சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக 10 நீதிபதிகள் பதவியேற்பு. தற்போதைய நீதிபதிகள் எண்ணிக்கை 63.
டிச., 7: இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லுாரி திறப்பு.
* ஜாதிவாரியான புள்ளி விவரங்களை அளிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைப்பு.
டிச., 8: சேலம் - சென்னை எட்டுவழிச்சாலை திட்டத்தை தொடர உச்சநீதிமன்றம் அனுமதி.
டிச., 14: புழல் ஏரியில் குளித்த மூவர் பலி.
* எட்டு மாதங்களுக்குப்பின் கடற்கரை சுற்றுலா தளங்கள், மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு.
* விழுப்புரத்தில் கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி.
டிச., 18: கலப்படத்தை தடுக்கும் நோக்கில் சில்லறை முறையில் சமையல் எண்ணெய் விற்க உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை.
* அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டும் பொங்கல் பண்டிகைக்கு ரூ. 2500 வழங்கப்படும்.
டிச., 23: தி.மு.க., வின் கிராமசபை கூட்டம் துவக்கம்.
டிச., 26: உலகின் எடைகுறைந்த செயற்கைக்கோளை தயாரித்து தஞ்சை மாணவர் ரியாஸ்தீன் சாதனை.
டிச., 28: நாகப்பட்டினத்தை பிரித்து 38வது மாவட்டமாக மயிலாடுதுறை உருவானது.

இந்தியா

டிச., 2: நாட்டில் சிறந்த 10 போலீஸ் ஸ்டேஷன் பட்டியலில் மணிப்பூருக்கு முதலிடமும், சேலம் சூரமங்கலத்துக்கு இரண்டாம் இடமும் கிடைத்தன.
டிச., 3: 2021 ஜன., 26 குடியரசு தின சிறப்பு விருந்தினராக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு இந்தியா அழைப்பு.
டிச., 10: 2021 முதல், ஜே.இ.இ., தேர்வு ஆண்டுக்கு (பிப்., மார்ச், ஏப்ரல், மே) நான்கு முறை நடத்தப் படும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவிப்பு.
டிச., 16: இந்தியா - பாக்., போரின் 50வது ஆண்டு தினத்தையொட்டி, போர் நினைவகத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
* கேரள உள்ளாட்சி தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் 672, காங்., 407, பா.ஜ., 21 இடங்களில் வென்றன.
டிச., 24: காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் பா.ஜ., 75, காங்., 26, பரூக் அப்துல்லா கூட்டணி 112 இடங்களில் வென்றன.
டிச., 26: திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக மார்க்சிஸ்ட் சார்பில் கல்லுாரி மாணவி ஆர்யா 21, தேர்வு.
டிச.,28: டில்லியில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் போக்கு வரத்தை பிரதமர் மோடி துவக்கினார்.

உலகம்
டிச., 4: இந்தியாவுக்கு ரூ. 6660 கோடியில் ராணுவ தளவாடங்களை விற்க அமெரிக்க பார்லிமென்ட் ஒப்புதல்.
* பிரான்சில் மல்லையாவின் ரூ. 14 கோடி சொத்துகள் முடக்கம்.
டிச., 7: பிரேசிலில் பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி.
டிச., 10: 'டைம்' இதழின் 2020ம் ஆண்டு சிறந்த நபராக அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ள ஜோ பைடன் - துணை அதிபர் கமலா ஹாரிஸ் தேர்வு..
டிச., 14: அமெரிக்காவில் பைசர் கொரோனா தடுப்பூசி பயன்பாடு துவங்கியது.
டிச., 19: அமெரிக்காவில் 'மாடர்னா' தடுப்பூசி பயன்பாட்டுக்கு அனுமதி.
டிச., 30: ஆக்ஸ்போர்டு - அஸ்ட்ராஜெனிகா கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அனுமதி.

இதுதான் 'டாப்'
* டிச.,4 : ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 152 இடங்களில் ஆளும் டி.ஆர்.எஸ்., 56, பா.ஜ., 48 இடங்களில் வென்றன.
* டிச., 14 : ஒரு டாக்டர், நர்ஸ், சுகாதார பணியாளர்களுடன் 2000 மினி கிளினிக் திட்டம் துவங்கியது.
* டிச., 17: உ.பி. அலிகார் முஸ்லிம் பல்கலை நுாற்றாண்டு பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கேற்பு.

புரெவி 'புயல்'
டிச., 3: வங்கக்கடலில் உருவான 'புரெவி' புயல் இலங்கையின் திரிகோணமலை அருகே கரையை கடந்து வலுவிழந்தது. தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது.

அரசியலுக்கு 'நோ'
டிச., 3: நடிகர் ரஜினி 2021 ஜனவரியில் கட்சி துவங்குவதாக அறிவித்திருந்தார். டிச., 29ல் உடல் நிலை காரணமாக அந்த முடிவை கைவிட்டார்.

உயர்ந்தது எவரெஸ்ட்
டிச., 8: இமயமலைத்தொடரில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 29,030.05 அடி என நேபாளம், சீனா அறிவித்தன. புதிய கணக்கெடுப்பில் முந்தைய உயரத்தை விட 86 செ.மீ., அதிகம்.

எல்லை தாண்டிய ரயில்
டிச., 17: மேற்கு வங்கத்தின் ஹல்திபாி - வங்கதேசத்தின் சிலாஹதி இடையே 55 ஆண்டுகளுக்குப் பின் சரக்கு ரயில் போக்குவரத்தை, பிரதமர் மோடி - வங்கதேச பிரதமர் ேஷக் ஹசீனா துவக்கினர்.

செயற்கை இறைச்சி
டிச., 2: முதன்முதலாக ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் இறைச்சியை சிங்கப்பூரில் விற்க அனுமதி. இதனை விலங்குகளின் செல்களை கொண்டு அமெரிக்காவின் ஈட் ஜஸ்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement