Load Image
Advertisement

கருப்பை பிரச்னை கழிச்சலுக்கு கறிவேப்பிலை

கறிவேப்பிலையில் தாது உப்புகள் மற்றும் விட்டமின் சத்துகள் நிறைந்திருப்பதால் கால்நடை மருத்துவ சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகிறது. கால்நடை மருத்துவ பல்கலையின் கீழ் செயல்படும் மரபுவழி மூலிகை ஆராய்ச்சி மையத்தின் மூலம் இச்சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.
மாடுகளின் மலட்டுத்தன்மை நீக்குவதற்கு கறிவேப்பிலை பயன்படுகிறது. தொடர் சிகிச்சையின் ஒரு பகுதியாக கறிவேப்பிலை கொடுக்க வேண்டும். சிகிச்சையின் முதல் 5 நாட்களுக்கு தினமும் கால்கிலோ முள்ளங்கி, அடுத்த நான்கு நாட்களுக்கு தினமும் ஒரு சோற்றுக்கற்றாழை மடலை உண்ண கொடுக்க வேண்டும். அடுத்த 4 நாட்களுக்கு 4 கைப்பிடி முருங்கை இலையும், அதற்கடுத்த 4 நாட்களுக்கு 4 கைப்பிடி பிரண்டை தாவரமும் கொடுக்க வேண்டும். சிகிச்சையின் கடைசி 4 நாட்களில் நாள்தோறும் 4 கைப்பிடி கறிவேப்பிலையுடன் சிறிது பனைவெல்லம், உப்பு சேர்த்து கொடுக்க வேண்டும்.

முள்ளங்கியும் சோற்று கற்றாழையும் கருப்பை அழற்சியை நீக்குகின்றன. பிரண்டை, முருங்கை, கறிவேப்பிலை ஆகியவை தாது உப்பு குறைவை சமப்படுத்துவதால் மாடுகளின் கருப்பை கோளாறுகள் சரியாகிறது.
கழிச்சல் நோயின் போதும் கறிவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. 5 சின்னவெங்காயம், ஒரு பல் பூண்டு, வெந்தயம், சீரகம், மஞ்சள், மிளகு தலா 10 கிராம், பெருங்காயம், கசகசா தலா 5 கிராம், 100 கிராம் பனைவெல்லத்துடன் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டைகளாக தினமும் ஒரு வேளை வீதம் 4 நாட்களுக்கு தர வேண்டும்.
- ராஜேந்திரன்
முன்னாள் இணை இயக்குனர் கால்நடை பராமரிப்பு
திண்டுக்கல், 94864 69044.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement