கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தின் கீழ் இதுவரை இரண்டரை லட்சம் விவசாயிகளுக்கு கிசான் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டரை கோடி விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் விவசாயிகள் அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை கடன் பெறலாம். ரூ.1.60 லட்சம் கடன் வரை உத்தரவாதம் தேவையில்லை. 2 சதவீத வட்டி தான். செயல்முறை கட்டணம் உள்ளிட்ட வேறு கூடுதல் கட்டணங்களை மத்திய அரசு ஏற்கனவே ரத்து செய்துள்ளது.
18 முதல் 75 வயது வரை கடன் பெறலாம் என்றாலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு துணை விண்ணப்பதாரர் அவசியம். விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்வளர்ப்பு, வேளாண்மை சார்ந்த எந்தவொரு நபரும் கிசான் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேசிய வங்கி, கூட்டுறவு மற்றும் தனியார் வங்கியை அணுகலாம். விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, பான் கார்டு, 100 நாள் வேலை திட்ட அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களுடன் நில ஆவணம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ பிற சான்றுகளுடன் வங்கியில் சமர்ப்பிக்கவேண்டும்.
வங்கிகள் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் விண்ணப்பதாரரின் வீட்டுக்கே கிசான் கார்டு அனுப்பப்படும். கடன் தொகைக்கு மட்டுமே அரசு வட்டி வசூலிக்கும். மூன்றாண்டுகளுக்குள் கடனை திருப்பி செலுத்தலாம். அறுவடை காலத்தில் கடனை திருப்பி செலுத்தும் வசதியும் உள்ளது.
குறைந்த வட்டியில் குறுகிய கால கடன் பெற்று தொழிலை மேம்படுத்தலாம்.
- சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
94435 70289.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!