வயது: 48
குழந்தைகள் : 2
கணவர்: பாலாஜி
தன் குடும்பத்திற்கு ஆரோக்கியம் வேண்டும் எனும் அனுராதாவின் சுயநலத்தில் துவங்கியது, இயற்கை விவசாயம் மீதான அவரது ஆர்வம். இன்று அதுவே பொதுநலனாகவும் துளிர் விடத் துவங்கி இருக்கிறது.
விவசாயம் என்பது...
விவசாயம்... எனக்கு வாழ்க்கை; 'இயற்கை விவசாயமும், மதிப்புகூட்டு பொருள் தயாரிப்பும்தான் நஷ்டத்தை தவிர்க்கும்'ங்கிறது என் நம்பிக்கை!
என் வளர்ச்சி
என் நிலத்துல விளையுற நெல்லி, மஞ்சள், மாம்பழம், சப்போட்டா, கொய்யா, காய்கறிகள் மற்றும் மூலிகைகள்ல இருந்து ஆம்லா அமுத பானம், நன்னாரி பானம், குளியல் சோப், மூலிகை குளியல் பொடின்னு இருபதுக்கும் மேற்பட்ட மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிச்சு, உரிய சான்றிதழோட விற்பனை பண்றேன். என் தயாரிப்புகளை சர்வதேச அளவுல ஏற்றுமதி செய்யணும்ங்கிறது என் கனவு.
பெண்ணிடம் துாவுங்கள்
ஒரு குடும்பத்தோட இயக்கமுறையை மாற்ற, குடும்ப தலைவியோட மனசுல விதை விதைக்கப்படணும்; பெண்ணோட உளவியல் குணம் அந்த விதையை விருட்சமாக்கிடும். இதனாலதான், இயற்கை விவசாயம் செய்ய விரும்புற பெண்களுக்கு நான் வழிகாட்டுதல் பயிற்சி வழங்குறேன்.
திருவள்ளூரின் பெரியபாளையம் செல்லும் வழியில்...20 கி.மீ., எர்ணாகுப்பம் கிராமத்தில் இருக்கிறது இவரது 8 ஏக்கர் நிலம்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!