'கள அனுபவத்தைவிட சிறந்த ஆசிரியர் கிடையாது!' - சென்னை,
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக மாணவியான அஸ்வினி ரமேஷ் 'லா ரீஒயர்டு' இணையதளத்தை துவக்க இந்த உண்மையே விதை.
களத்துல இறங்குங்க
பள்ளியில என்.எஸ்.எஸ்., - ஜே.ஆர்.சி., தந்த சமூகப்பணி அனுபவங்கள்தான், 'நம்மாலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்'ங்கிற தன்னம்பிக்கையை எனக்குத் தந்தது.
லா ரீஒயர்டு
கல்வியறிவோட இருக்குறவங்களுக்கு கூட சட்டங்கள் பற்றிய அடிப்படை புரிதல் இல்லைங்கிறதை மாத்த நினைச்சேன்; இந்தியா முழுக்க 22 சட்ட மாணவர்கள் பங்கேற்போட, 'லா ரீஒயர்டு' தளத்தை உருவாக்கினேன்.
சட்டம் தொடர்பான அத்தனை விஷயங்களும் இதுல எளிமையா இருக்கு; இதை அந்தந்த மாநில மொழிகள்ல வழங்குற திட்டமும் இருக்கு!
ஓய்வுக்கு ஓய்வு
பிளஸ் 2 முடிச்சுட்டு உடல்நிலை காரணமா ஓர் ஆண்டு மேற்படிப்புக்கு போகாம வீட்ல இருந்தேன். அந்தசமயத்துல, மருத்துவ முகாம் ஒருங்கிணைக்கிறது, பள்ளிகள்ல 'சைபர் குற்றங்கள்' பற்றி விழிப்புணர்வு வழங்குறதுன்னு என்னை பரபரப்பா வைச்சுக்கிட்டேன். ஒருவேளை அப்போ நான் ஓய்வு எடுத்திருந்தா துருப்பிடிச்சிருப்பேன்!
எங்கள் அஸ்வினி
'எவ்வளவு சிக்கலான விஷயத்தையும் அதோட வேர்ல இருந்து அணுகி சுலபமா புரிஞ்சுக்கிற மாணவி எங்க அஸ்வினி!'
- முனைவர் ரஞ்சித், பேராசிரியர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!