இந்தியாவில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் அறிமுகமாகி 20 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதுவரை 2 கோடி ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. இதனை கொண்டாடும் வகையில் புதிதாக 'ஆக்டிவா 6ஜி'அனிவர்சரி எடிஷன் ஸ்கூட்டர் அறிமுகமாகியுள்ளது.
ஸ்டாண்டர்டு, டீலக்ஸ் என இரண்டு வேரியன்ட்டுகளில் கிடைக்கும். மேட் மெச்சூர் பிரவுன், பியர்ல் நைட் பிளாக்ஸ்டார் என இரு புதிய வண்ணங்கள், தங்க வண்ணத்தில் ஆக்டிவா பேட்ஜ், 20 ஆண்டுகளை குறிக்கும் லோகோ, முன்புறத்தில் ஸ்டிக்கர் அலங்காரம், கருப்பு வண்ண வீல் போன்றவை புதிய அம்சங்களாக சேர்க்கப்பட்டுள்ளன.
தவிர, டியூப்லெஸ் டயர், வீல்பேஸ் அதிகரிப்பு, வெளியில் பெட்ரோல் டேங்க் மூடி, எல்இடி ஹெட்லைட்டுகள், மல்டி பங்ஷன் கீ சிஸ்டம், பெரிய பூட்ஸ்பேஸ் இடவசதி, செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், மல்டி பங்ஷன் கீ சிஸ்டம், சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் சிறப்பம்சம். இதன் 110 சிசி இன்ஜின், 8 பிஎச்பி பவரையும், 8.79 என்எம் டார்க் திறனையும் அளிக்கும்.
விலை: ஸ்டாண்டர்டு வேரியன்ட்-ரூ.66,816
டீலக்ஸ் வேரியன்ட்-ரூ.68,316
* அனைத்தும் எக்ஸ்ஷோரூம்
அருமையான ஆக்டிவா
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!