dinamalar telegram
Advertisement

நோக்கியாவின் பியூச்சர் போன்கள்

Share

நோக்கியா, அதன் பியூச்சர் போன்கள் வரிசையில், அண்மையில் இரண்டு போன்களை அறிமுகம் செய்திருக்கிறது.
'நோக்கியா 215 - 4ஜி' மற்றும் 'நோக்கியா 225 - 4ஜி' ஆகிய போன்களை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த போன்கள் முதற்கட்டமாக சீனாவில் அறிமுகம் ஆகியிருக்கிறது.
இந்த இரு போன்களும் '4ஜி எல்.டி.இ.,' சேவையில் செயல்படக்கூடியவை. மற்றபடி வழக்கமான, எப்.எம்., ரேடியோ, பிளாஷ்லைட், புளூடூத், எம்.பி., 3 பிளேயர், கழட்டும் வகையிலான பேட்டரி, 'டி9' கீபோர்டு போன்ற வசதிகளை கொண்டிருக்கின்றன. மேலும், 32 ஜி.பி., வரை சேமிப்புத் திறனை அதிகரித்துக் கொள்ள முடியும்.
இந்த இரு போன்களுக்கும் இடையே ஒரே ஒரு வித்தியாசம், நோக்கியா 215 - 4ஜி போனில் கேமரா கிடையாது என்பது தான்.
விலை:
நோக்கியா 215 - 4ஜி: ரூ.3,150
நோக்கியா 225 - 4ஜி: ரூ.4,290

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • சூரியா -

    பியூச்சர் அல்ல.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement