LOGIN
dinamalar telegram
Advertisement

இனி மணலில் விவசாயம் செய்யலாம்

Share

மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரியின் தாவரவியல் பேராசிரியர் ராஜேந்திரன். கல்லுாரியின் ரூரல் பயோ டெக்னாலஜி யூனிட் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். தொடர்ந்து புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தி கொண்டிருக்கும் இவர், தற்போது கடற்கரை மணலிலும் விவசாயம் செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளார்.
அவர் கூறியதாவது : ஆற்றுமணல், கடற்கரை மணலில் ஆர்கானிக் கார்பன் இருக்காது. இன்ஆர்கானிக் கார்பனால் பயனில்லை. இந்த மணலை கெட்டிப்படுத்துவதன் மூலம் உறுதியாக்கலாம். இதற்கு கடற்பாசியை பயன்படுத்த வேண்டும். நீலம், பச்சை, சிவப்பு, பிரெளன் என எந்த நிற கடற்பாசியையும் ஆய்வகத்தில் வேகவைத்து பேஸ்ட்டாக்கி மணலுடன் கலந்தால் கெட்டியாகி விடும். இதில் விதை போட்டு செடிகள் நடலாம். தண்ணீர் விடும் போது சற்றே இளகி நீரை உள்ளே உறிஞ்சும். களிமண் போல மீண்டும் இறுகிவிடாது. அதனால் செடியின் வேர்கள் சுவாசிக்க முடியும். இந்த தொழில் நுட்பத்தில் மணலுடன் ஆர்கானிக் கார்பன், தாதுஉப்புகள் சேர்க்கப்படுவதால் செடிகள் நன்றாக வளரும், என்றார்.
இவரிடம் பேச : 94439 98480.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (5)

  • Senthamilselvan - Nagapattinam,இந்தியா

    அற்புதமான கண்டு பிடிப்பு நான் நேரில் சென்று ஆலோசனை பெற விரும்புகிறேன். எனது‌ மூன்று தலைமுறை கள் கஷ்டப்பட்டு விட்டார்கள். மணலில் விவசாயம் செய்து.

  • Shivshankar - Bangalore,இந்தியா

    அற்புதமான, தேவையான ஆராய்ச்சி. பாராட்டுக்கள். நன்றி தினமலர். இத்தகு செய்திகள் இன்னும் கவனம் பெறட்டும்.

  • Bhaskaran - Chennai,இந்தியா

    இனி ஸ்டாலின் தைரியமாக விவசாயிகளுக்கு நிலம் இலவசமாக தருவோம் என்று சொல்லலாம் சென்னை டு கன்னியாகுமாரி வரை இருக்கும் கடற்கரைநிலங்கள் பட்டா போட்டுத்தரப்படும்

  • G.Kirubakaran - Doha,கத்தார்

    இவரின் கண்டு பிடிப்பு அபாரம் .

  • NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா

    அருமை

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement