LOGIN
dinamalar telegram
Advertisement

அமேசானின் அறிமுகங்கள்

Share

அமேசான் நிறுவனம், புதிய எக்கோ சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. எக்கோ (4வது ஜென்) எக்கோ டாட் (4வது ஜென்), எக்கோ டாட் (4வது ஜென்) கடிகாரத்துடன் கூடியது என, மூன்று சாதனங்கள் அறிமுகம் ஆகியுள்ளன.
இந்த சாதனங்கள் அனைத்துமே, மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் தயாரிக்கப்பட்டுள்ளன.
இவற்றில், புதிய எக்கோ டாட் சாதனத்துக்கு முன்கூட்டியே ஆர்டர் கொடுப்பது துவங்கப்பட்டுள்ளது. வினியோகம் இந்த ஆண்டு பிற்பகுதியில் இருக்கும். மற்றவற்றுக்கு முன்கூட்டிய பதிவும் இனிதான் ஆரம்பிக்கப்பட இருக்கிறது.

விலை:
புதிய எக்கோ: 9,999 ரூபாய்
எக்கோட் டாட்: 4,999 ரூபாய்
எக்கோ டாட் கடிகாரத்துடன் கூடியது: 5,499
இவை தவிர, எக்கோ டாட் குழந்தைகள் பதிப்பு ஒன்றையும், அமெரிக்காவில் அமேசான் அறிமுகம் செய்துள்ளது. ஆனால் இது இந்தியாவுக்கு வராது என்கிறார்கள்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • manikandan - wilmington,யூ.எஸ்.ஏ

    அமெரிக்காவில் இதன் விலை ஏழாயிரத்து ஐநூறு மட்டுமே . இந்தியர்கள் ஏமாற்ற படுகிறார்கள்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement