LOGIN
dinamalar telegram
Advertisement

நோக்கியாவின் புதிய வரவுகள்

Share

எச்.எம்.டி., குளோபல் நிறுவனம், இம்மாதம், 22ம் தேதியன்று, புதிய நோக்கியா போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த அறிமுக நிகழ்ச்சி, நோக்கியா மொபைல் யுடியூப் சேனல் மூலமாக நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.
இருப்பினும், என்னென்ன போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
இருப்பினும், நோக்கியா 3.4 மற்றும், நோக்கியா 2.4 ஆகிய போன்கள் இந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன், மூன்று கேமரா அமைப்புடன் இருக்கும் என்றும்; அந்த அமைப்பு வட்ட வடிவத்தில் இருக்கும் என்றும் செய்திகள் கசிந்துள்ளன. மேலும், கூகுள் அசிஸ்டென்ட் சேவைக்காக, வலது புறம் தனியாக ஒரு பட்டன் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
நோக்கியா 2.4 போன், 3 ஜி.பி., ரேம், 64 ஜி.பி., சேமிப்புத் திறன் கொண்டதாக இருக்கும் என்றும், 4,500 எம்.ஏ.எச்., பேட்டரி கொண்டிருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement