LOGIN
dinamalar telegram
Advertisement

வரப்பை வெட்டி பூசுது நவீன கருவி

Share

நெல்வயலில் வரப்பையொட்டி எலி வளை, நண்டு வளைகள் தோண்டுவதால் வயலுக்கு நீர்க்கட்டும் போது நீர் கசிந்து வெளியேறுகிறது. இதைத் தடுக்கும் வகையில் வரப்பை வெட்டி பூசும் பணி வழக்கமாக நடைபெறும். ஒரு ஏக்கர் அளவு வயலை வெட்டி பூசுவதற்கு குறைந்தது ஆறுபேர் வேலை செய்ய வேண்டும்.

வேளாண் பல்கலை, அரசின் புதுமை முயற்சி திட்டத்தின் கீழ் வரப்பு வெட்டும் இயந்திரம் மதுரை விவசாயக்கல்லுாரியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு வயலில் இருந்து இன்னொரு வயலுக்கு தண்ணீர் கசிவதை இதன் மூலம் தடுக்கலாம். ஒரு மணி நேரத்தில் ஒரு ஏக்கர் நிலத்திற்கு வரப்பை வெட்டி பூசி விடுகிறது இந்த இயந்திரம். இதனால் வரப்பில் உள்ள எலி, நண்டு வளைகள் அடைக்கப்படுவதோடு உறுதியான சுவர் போல வரப்பு மாறி விடுகிறது. பயிர் அறுவடை செய்யும் 130 நாட்கள் வரை வரப்பு உறுதியாக நிற்கிறது.

ஸ்டீல் இயந்திரத்தால் ஆன இந்த வெட்டி பூசும் கருவியை, டிராக்டர் வைத்திருக்கும் விவசாயிகள் தனியாக வாங்கி பொருத்திக் கொள்ளலாம். கருவியை பயன்படுத்தி பார்க்க விரும்பும் விவசாயிகள் தனியாகவோ, குழுவாகவோ வந்தால் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

- துரைசிங், துறைத்தலைவர்
சுப்ரமணியன், உதவி பேராசிரியர்
உழவியல் துறை, மதுரை விவசாயக் கல்லுாரி
90034 28245.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement