LOGIN
dinamalar telegram
Advertisement

ஏக்கருக்கு 8 கிலோ விதை... 600 கிலோ பாசிப்பயறு

Share

பயறு வகையில் முக்கியமானது பாசிப்பயறு. இதில் புரதம், நார் மற்றும் இரும்புச்சத்துகள் அதிகம் உள்ளன. 90 முதல் 100 நாட்களில் அறுவடை முடிந்து விடும். மற்ற பயிர்களுடன் ஒப்பிடும் போது தண்ணீர்த் தேவை மிகவும் குறைவு.
உப்பு மற்றும் நீர்த் தேக்க முள்ள நிலத்தை தவிர, அனைத்து வகையான மண்ணிலும் பயிரிட ஏற்றது.
செப்டம்பர் அல்லது அக்டோபரில் பயிரிட ஏற்றது.
நிலத்தை தயார் செய்ய வேண்டும்
நிலத்தை 2 அல்லது 3 முறை உழுது களைகளை அகற்ற வேண்டும். ஏக்கருக்கு 5 டன் தொழுஉரம் இட்டு தயார் செய்ய வேண்டும். நீர்ப் பாசனத்திற்கு ஏற்ற வகையில் பாத்திகள் அமைக்க வேண்டும்.
கிலோவுக்கு 2 கிராம் திரம் அல்லது 10 கிராம் சூடோமோனஸ் கலந்து விதைநேர்த்தி செய்ய வேண்டும். ஏக்கருக்கு 8 கிலோ விதைகளை துாவலாம். அல்லது 30க்கு 10 செ.மீ., இடைவெளியில் ஒரு அங்குல ஆழத்தில் விதைகளை நடலாம். விதைத்த பின் லேசாக நீர் தெளித்தால் வளர்ச்சி வேகமாக இருக்கும்.
விதைத்த 20 ம் நாள், 35 ம் நாளில் களையெடுக்க வேண்டும். மண்ணின் தன்மை மற்றும் மழைக்கேற்ப 15 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சலாம். தண்ணீர் அதிகமானால் செடிகள் துவண்டு பூக்கள் உற்பத்தி குறைந்து விடும். தேவைப்பட்டால் 45 நாட்களுக்கு பின் மேல் உரம் இடலாம். 55 நாட்களுக்கு பின் தண்ணீர் பாய்ச்ச தேவையில்லை.
ஒரு லிட்டர் தண்ணீரில் 20 கிராம் டி.ஏ.பி அல்லது 20 கிராம் யூரியா கலந்து முதல்முறையாக பூக்கும் தருணத்தில் இலைவழி நுண்ணுாட்டமாக கைத் தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். அடுத்து 15 நாட்களில் 2வது முறையாக தெளிக்க வேண்டும். 60 முதல் 65ம் நாளில் 85 சதவீத காய்கள் அறுவடைக்கு தயாராகி விடும். 80 ம் நாளில் 2ம் அறுவடையும், 90 ம் நாளுக்கு மேல் 3ம் அறுவடையும் கிடைக்கும். எல்லா பயிர்களும் முழுமையாக முதிர்ச்சி அடையும் வரை காத்திருந்தால் பயிர்கள் வீணாக வாய்ப்புள்ளது. ஏக்கருக்கு 600 கிலோ வரை விதைகள் கிடைக்கும்.
- பிரபா, வேளாண் ஆலோசகர்
உடுமலைபேட்டை.
98940 54524

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா

    இயற்கை வழி விவசாயத்துக்கும் முன்னுரிமை கொடுங்க

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement