LOGIN
dinamalar telegram
Advertisement

விதைப்பண்ணை அமைப்பது எப்படி

Share

வேளாண் ஆராய்ச்சி நிலையங்களில் முதல் தலைமுறை எனப்படும் வல்லுனர் விதைகள் விற்கப்படுகின்றன. இவை அதிக முளைப்புத் திறனுடன் இனத்துாய்மை மற்றும் வறட்சியை தாங்கும் திறனுடன் இருக்கும்.
இவற்றை வாங்கும் விவசாயிகள் இதிலிருந்து ஆதார விதைகளையும் ஆதார விதையில் இருந்து மூன்றாம் கட்டமாக சான்று விதைகளையும் உற்பத்தி செய்யலாம். விவசாயிகள், தனிநபர்கள் விதை உற்பத்தியாளர்களாக பதிவு செய்து சான்று விதைகளை உற்பத்தி செய்யலாம். விதை சான்றளிப்பு துறை அலுவலர்களாக சான்று விதைகள் ஆய்வு செய்யப்பட்டு விதைச்சான்று வழங்கப்படுகின்றன.
முதலில் விதைப்பண்ணை அமைக்க உள்ள நிலத்தை பதிவு செய்ய வேண்டும். அவ்வப்போது விதைகளின் பல்வேறு உற்பத்தி நிலைகளை விதை அலுவலர்கள் ஆய்வு செய்வர். அறுவடைக்கு பின் விதை சுத்திகரிக்கப்படுகிறது. இதிலிருந்து மாதிரி விதைகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்படுகிறது.
தரத்தின் அடிப்படையில் விதைச் சான்று உதவி இயக்குனர் அலுவலகம் சான்று வழங்கும். அதன் பின் விதைகள் தகுதிக்கு உரியதாக விற்பதற்கான சான்றளிக்கப்படுகிறது. சான்று விதைகள் தரம்
வாய்ந்ததாக இருப்பதால் விதைப்பதற்கான விதையின் தேவை குறைகிறது. பிற இன கலப்பு, பிற ரக கலப்பின்றி விதைகள் கிடைக்கிறது. 15 முதல் 20 சதவீதம் வரை மகசூலும் அதிகரிக்கும்.
- பேராசிரியர் சிவக்குமார்
இணைப்பேராசிரியர் ஷாகிர்
கலசலிங்கம் வேளாண் மற்றும் தோட்டக்கலை அறிவியல் புலம்
கிருஷ்ணன் கோவில்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement