Advertisement

அரிசியில் அசத்தும் ஆத்தூர் கிச்சிலி சம்பா

Share

கலப்பினம் இல்லாத ஆத்துார் கிச்சிலி சம்பாவை அறுவடை செய்வது பாரம்பரியத்தை மீட்டெடுப்பதற்கு சமம் என்கிறார் ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜபுரத்தைச் சேர்ந்த விவசாயி பிரபாகரன்.
பொன்னி கூட கலப்பின ரகம் தான் என்று கூறும் பிரபாகரன் கிச்சிலி சம்பாவின் பெருமைகளை விளக்கினார். பாரம்பரிய ரகங்களில் 99 சதவீதம் சிவப்பு நிற மோட்டா அரிசி தான். விளைச்சலும் குறைவாக இருக்கும். ஆத்துார் கிச்சிலி சம்பா சன்ன ரகத்தோடு வெள்ளை நிறத்துடன் பொன்னி அரிசிக்கு நிகராக உள்ளது. இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து மிகுந்து சாப்பாட்டுக்கு சிறந்த ரகமாக உள்ளது. மரபணு மாற்றம் செய்யப்படாத இந்த ரகத்தில் விவசாயிகள் எதிர்பார்க்கும் விளைச்சலும் கிடைக்கும்.
5 மாத விளைச்சலான இந்த ரகம் சம்பா சீசன் எனப்படுகிறது. ஆடிப்பட்டத்தில் இருந்து தைப்பட்டத்தில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே விளைகிறது.
நாற்றாங்காலில் இருந்து கை நடவு அல்லது மெஷின் நடவு முறையில் நடலாம். ஒரு மாதத்தில் செடி படர்ந்து விடுவதால் களைகள் குறைவாக இருக்கும். கையால் களை எடுத்தால் போதும். கூடுதல் தண்ணீர் கட்டி விட்டால் களைகள் வளராது. களைக்கொல்லி பயன்படுத்த வேண்டாம். ஐந்தடி உயரத்தில் இயற்கையாகவே நோய், பூச்சி தாக்குதல் இன்றி வளரும். இதற்கு உரம் போடத் தேவை இல்லை.
அதிக செலவின்றி விவசாயிகளின் கையை கடிக்காத இந்த ரகம் நமது பாரம்பரியத்திற்கு சொந்தம் என்பதால் இதை சாகுபடி செய்கிறேன். தற்போது அறுவடை முடிந்து அரிசியாக விற்பனை செய்கிறேன் என்றார்.
தொடர்புக்கு: 73971 25354.
- எம்.எம்.ஜெயலெட்சுமி, மதுரை

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (4)

  • Ganesan Madurai -

    மிகவும் மகிழ்ச்சி.

  • Baskar - sollamudiyatha naadu,இந்தியா

    என்னது ஐந்து அடி உயரமா ? இருந்தாலும் மணப்பாறை மாடு கட்டி , சிவாஜி பாடினது ஞாபகம் வருது . என்னால முடிஞ்சது கருத்து பதிவிட்டேன் . இதோட சத்து , ப்ரோடீன் , கார்போஹைட்ரெட்ஸ் டேபிள் வெளியிட்டு இருந்தால் நன்றாக இருக்கும் . உதாரணமாக வரகு தானியங்களில் 40-60% கார்போஹைட்ரெட்ஸ் உண்டு .

  • RAMAKRISHNAN K - East Tambaram, Chennai,இந்தியா

    அது "கிச்சிலி" சம்பா இல்லை, "கிச்சடி" சம்பா.

  • NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா

    படிக்கவே சந்தோஷமா இருக்கு

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement