Load Image
Advertisement

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க மானியம்

விவசாயத்தில் அதிகளவு ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் வளர்ச்சி ஊக்கிகளை பயன்படுத்துவதால் மண்ணின் வளம் குறைந்து, மலட்டுத்தன்மையாகி, சுற்றுச்சூழல் அதிகளவு பாதிக்கப்படுகிறது. மேலும் ரசாயன உரத்தை அதிகளவு பயன்படுத்துவதால் காய்கறி மற்றும் பழங்களில் நச்சுத்தன்மை அதிகளவு படிந்து விடுகிறது. அதனை உட்கொள்ளும் மனிதர்களுக்கு உடல் உபாதைகளையும், நோய்களையும் கொடுக்கின்றது. இதை தவிர்க்க விவசாயிகளிடையே இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க தோட்டக்கலைத்துறைக்கு மாவட்டம் தோறும் அரசு தலா ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் எக்டருக்கு ரூ.4 ஆயிரம் ஊக்கத் தொகையும், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயற்கை முறையில் கீரை விவசாயம் செய்ய எக்டருக்கு ரூ.2500 மற்றும் காய்கறி பயிர்கள் விவசாயம் செய்ய ரூ.3800 ஊக்க தொகை வழங்கப்படுகிறது.

இத்துடன் சான்றிதழ் பெற ஒரு விவசாயிகளுக்கு ரூ.500 மானியம் வழங்கப்படுகிறது. இயற்கை முறையில் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளுக்கும் இத்திட்டத்தில் சேரலாம். சிறு, குறு, பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை உண்டு. இத்திட்டத்தில் ஊக்க தொகை பெற சம்பந்தப்பட்ட இயற்கை பண்ணையின் சான்றிதழின் நகலை விண்ணப்பத்துடன் இணைத்து வழங்க வேண்டும். இத்திட்டத்தில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயனடையலாம்.
- கே.ரேவதி, துணை இயக்குனர்
தோட்டக்கலைத்துறை, மதுரை
0452 -253 2351



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement